Abstract:
கிழக்கிலங்கைச் சைவத் தலங்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில்
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதன்மையானதும் பழமையானதுமான
நூலாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கிழக்கிலங்கைத்
தேசத்துக் கோயிலாகக் கொள்ளப்படுவதுமான வெருகல் சித்திரவேலாயுதர்
கோயிலின் சிறப்புக்களையும் அங்கு எழுந்தருளியுள்ள முருகக்
கடவுளின் பெருமைகளையும் பாடுவதை நோக்காகக் கொண்டது
இந்நூல்.