Abstract:
நமது வரலாறானது அண்மைக்காலம் வரை சமூக பண்பாட்டு வரலாற்
றைப் புறக்கணித்த வரலாறாகவும் மேட்டிமைப் பண்புசார் வரலாறாகவும்
கட்டமைக்கப்பட்டு வந்தது. இந்த வரலாற்று எழுதியலுக்குப் பயன்படுத்தப்
பட்ட எழுத்துநிலை ஆவணங்கள் அதிகாரம் மிக்கவர்களைச் சார்ந்திருந்
தமையால் அந்த வரலாறுகள் பொதுமக்கள் சார்ந்த சமூக வரலாற்றைப்
புறக்கணித்தே வந்தன. துரதிஸ்டவசமாக சமூக வரலாறு என்பது
புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இந்தியாவில் உள்ளது என்று சுமித்
சர்க்கார் கூறுவதாக ஆ. சிவசுப்பிரமணியம் கூறுவார்.
இது ஈழத்திற்கும் நன்கு பொருந்தும். நம் வரலாறானது சமூகம் சார்ந்த
வரலாறாக இன்னும் எழுதப்படவில்லை.