திரைப்படக் கலை - ஓர் பின்நவீனத்துவ ஆய்வு

Show simple item record

dc.contributor.author இரத்தினசபாபதி பிறேம்குமார்
dc.date.accessioned 2020-03-05T06:49:28Z
dc.date.available 2020-03-05T06:49:28Z
dc.date.issued 2019
dc.identifier.issn 2386 - 1630
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/4284
dc.description.abstract திரைப்படம் தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கலை வடிவமாக விளங்கி வருகிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மொத்த உருவமாக இந்த வடிவம் காணப்படுகிறது. பாரம்பரியமாக மக்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகின்ற கலை வடிவங்களான ஓவியம், நாடகம், சிற்பம், இன்னும் பல., என்பவற்றைக் காட்டிலும் வேறுபட்ட பல தனித்துவ அம்சங்களைக் கொண்டதாக இந்த கலை வடிவம் காணப்பட்டு வருகின்றது. திரைப்படம் என்பதை குறிப்பதற்கு ஆங்கிலத்தில் பல்வேறு பதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஷசினிமா| (உiநெஅய) என்பது முதன்மையானது. ஷசினிமா| (உiநெஅய) என்ற ஆங்கிலப்பதம் கிரேக்க மொழியில் இருந்து வருகின்றது. இதன் அர்த்தம் 'அசைவு' என்பதாகும். இதே போல் திரைப்படத்தைக் குறிக்கும் மற்றுமொரு ஆங்கிலப்பதமாக ஷமூவி| (அழஎநை) காணப்படுகிறது. இது அசையும் படங்கள் (அழஎiபெ piஉவரசநள) என்ற தொடரின் சுருக்க வடிவமாக கருதப்படுகிறது. இதே போல் திரைப்படத்தை குறிக்கும் மற்றுமொரு ஆங்கிலப்பதமாக ஷபிலிம்| (கடைஅ) காணப்படுகின்றது. இது திரைப்படம் உருவாக்கப்படும் படச்சுருளுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது. திரைப்படத்தினை குறிக்க மேலே குறிப்பிட்ட பல வார்த்தைகள் காணப்பட்டாலும், 'திரைப்படம்' என்ற வார்த்தை அதிக புரிதலையும் பயன்பாட்டினையும் மக்கள் மத்தியில் கொண்டிருப்பதன் காரணமாக திரைப்படம் என்ற சொல்லே இக்கட்டுரை முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் கலை வடிவம் என்ற தகுதியினை பெற்றுக் கொண்ட போதும் அழகியல் மெய்யியலாளர்களில் ஒரு சாரார் அதனை கலை வடிவமாக ஏற்றுக் கொள்ள முடியாது என வாதிட, மற்றுமொரு சாரார் இதனை கலை வடிவமாக ஏற்றுக் கொள்ளலாம் என வாதிடுகின்றனர். இந்த இரு சாராரின் வாதங்களும் கலைக்குரிய பண்பினை திரைப்படங்கள் பூர்த்தி செய்கின்றதா? என்ற பிரச்சினையினை மையமாகக் கொண்டதாக உள்ளது. திரைப்படம் ஒரு கலை வடிவமா? அல்லது இல்லையா? என்ற பிரச்சினையினை இக்கட்டுரை திரைப்படமும் அதன் வகைப் படுத்தல்களும், திரைப்படமும் தொழில்நுட்பமும், திரைப்படமும்நோக்கமும், திரைப்படமும் இரசிகர்களும் என்ற பரிமாணங்களில் ஆராய்வதுடன் பின்நவீனத்துவ நோக்கில் இப்பிரச்சினை தொடர்பான கருத்துக்களை முன்வைக்கின்றது. en_US
dc.language.iso ta en_US
dc.publisher சுகந்திர ஆய்வு வட்டம் en_US
dc.subject திரைப்படக் கலை - ஓர் பின்நவீனத்துவ ஆய்வு en_US
dc.subject திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் கலை வடிவம் en_US
dc.title திரைப்படக் கலை - ஓர் பின்நவீனத்துவ ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account