Abstract:
மனித உருவாக்கத்தில் தேவைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
விலங்குகள் உயிர் வாழ்வதற்கான வழிகளை பெரும்பாலும் தமது
உடல்களிலும், உடனடி சுற்றுச் சார்புகளிலும் கொண்டுள்ளன. சில
விலங்குகள் தம் சூழலில் உள்ள தாவரங்களை மட்டும் உண்டு உயிர்
வாழ்கின்றன. தாவரங்கள் அழிகின்றபோது அவையும் அழிகின்றன.
ஆனால் விலங்குகளோடு ஒப்பிடும்போது மனிதர் பலவீனமானவர்.
தமது தேவைகளுக்கான சாதனங்களை தாமே படைக்கவேண்டிய
தேவை அவர்களுக்கு மட்டுமேயுள்ளது.
மனிதரது தேவையுடன் தொடர்புபட்டே மனிதரது தனிப்பட்ட
வாழ்வும், வரலாற்று ரீதியான வாழ்வும் தொடங்குகின்றன. தேவைகளைப்
பூர்த்தி செய்யவே உழைப்பும் கருவிகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
மானிடத் தேவையென்பது ஒரு செயல், உறவுச் செயல். அது
இயற்கையுடனும் இதர மனிதர்களுடனும் புறப்பொருட்களுடனும் மனிதர்
கொண்டுள்ள ஒரு சிக்கலான உறவு என்பதையே மார்க்ஸிய சிந்தனை
உணர்த்துகின்றது.