Abstract:
தமிழகத்தின் கலை வடிவங்களில் தொன்மையானதாகவும், அரங்கக்
கூறுகளை முழுமையாக உள்வாங்கியும் உள்ள நிகழ்த்துக்கலை வடிவம்
தெருக்கூத்துக் கலையாகும். இத்தகைய தெருக்கூத்துக் கலை குறித்து
ஆராயும்பொழுது, தெருக்கூத்துப் பாணிகள் குறித்தும் கவனம் செலுத்த
வேண்டியது இன்றியமையாததாகும். இந்நிலையில், தெருக்கூத்துக்
கலையில் பாணி என்றால் என்ன? எத்தகைய வேறுபாடுகளால் பாணி
அடையாளப்படுத்தப்படுகிறது? எத்தனை வகையான பாணிகள் உள்ளன?
இப்பாணியை அங்கீகரிப்பவர்கள் யார்? அங்கீகரிப்பவர்கள் எத்தகைய
பயிற்சியைப் பெற்றவர்கள்? என்னும் பன்முகப் பார்வையில் ஆராயும்
பொழுதுதான் தெருக்கூத்துப் பாணிகள் குறித்த முழுமையான
புரிதலைப்பெற முடியும்.