Abstract:
தமிழகத்திலும் ஈழத்திலும் வாய்மொழி மரபு, ஆற்றுகை மரபு, ஓலைச்
சுவடி மரபு, கையெழுத்துப் பிரதிகள் மரபு என்பவை எவ்வாறு அச்சு
மரபிற்குள் கொண்டுவரப்படுகின்றன? என்ற விடயம் குறித்து விரிவான
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற வினாவை எழுப்பிக்
கொள்ளலாம். பழைய மரபிலிருந்து புதிய மரபிற்குள் ஒரு பிரதி
மாற்றம் பெறும் போது, அதன் மூலம் உருப்பெறும் பல்வேறு
பரிமாணங்கள் குறித்தும் உரையாடுவது அவசியம். இந்தப் பின்புலத்தில்
வடிவேல் இன்பமோகன் பதிப்பித்துள்ள 'குருக்கேத்திரன் போர்
(வடமோடிக் கூத்து)' (2017) என்னும் பிரதி உருவாக்கம் எவ்வாறு
நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை
இத்தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.