Abstract:
1. இருப்பைக் குறிக்கும் வினைச்சொல்
வாக்கியங்கள் பொதுவாகப் பொருளையோ செயலையோ குறிப்பன.
இங்கு, பொருளென்பது பண்டங்களை மட்டுமன்றிச் சீவராசிகளையும்
உணர்வுகளையும் பண்புகளையுங் குறிக்கும். நிகழ்வென்பது எண்ணம்
உட்படப் பல்வகைச் செயல்களை உணர்த்தும்.
ஒரு செயலைக் கூற வினைச்சொல் தேவை. ஒன்றின் இருப்பை
உணர்த்த வினைச்சொல் கட்டாயமில்லை. எனினும், ஒரு பொருள்
முன்னர் இருந்தது எனவோ இனி இருக்கும் எனவோ கூற ஒரு
வினைச்சொல் தேவைப்படலாம்.
பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில், ஒரு பொருளின்
இருப்பைக் குறிக்கும் வினைச்சொல் (ஆங்கிலத்தில் ளைஇ யஅஇ யசந
என்றவாறு) உள்ளது. அம் மொழிகளில், ஒரு பொருளைக் குறிக்கும்
வாக்கியத்துக்கு அது அவசியம்.