Abstract:
ஒரு நாடு தனது அதிகாரத்திற்கு உட்படுத்திய நாடுகளை ஆளுகைக்குட்
படுத்துவதற்கான அமைப்புமுறை காலனித்துவமென அழைக்கப்படும்.
காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் மூலமாக பொருளாதார
ரீதியான நன்மைகளைப் பெறுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
காலனித்துவம் நாடுகளை ஆட்சி செய்வதற்காக சுய நிர்ணயப்படுத்தப்பட்ட
உரிமையை (ளுநடக-யிpழiவெநன சiபாவ) பிரயோகித்தது. இது நீதியின் மூலமே
நிறைவேற்றப்பட்டது.
காலனித்துவம் மிகவும் நீண்ட காலப்பகுதியைக் கொண்டதுதொரு
அதிகாரச் செயற்பாடாக அமைந்திருந்தது. ஆனால் காலனித்துவத்தில்
இருந்து விடுபட்டு நீண்டகாலத்தைத் தாண்டியபோதும் காலனித்துவம்
ஏற்படுத்திய விளைவுகள் தற்காலத்திலும் மக்களிடையே உள்ளது.
இது காலனித்துவத்தின் பாதிப்புக்களில் இருந்து மக்கள் விடுபடாத
நிலையினையே குறிக்கின்றது. தற்காலத்தில் உருவாக்கப்படும்
கலையிலும் காலனித்துவத்தின் பாதிப்புக்களை இனங்காணமுடியும்.
உலகமயமாக்கல், பின்காலனித்துவம் அல்லது நவ காலனித்துவம்
என்பனவற்றின் தாக்கத்தை வைத்துக் கொண்டு நோக்கும் போது
காலனித்துவம் மிகவும் உறுதியான செயற்பாடாக காணப்பட்டது
என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.