Abstract:
சுவைத்தலை நோக்காகக் கொண்டு படைக்கப்படும் கலை
இருவிதமான ஆற்றலைக் கொண்டது. ஒன்று அக்காலத்தைப்
பதிவுசெய்வது, மற்றையது உலகளாவிய மனிதப்பெறுமானத்தை
வெளிப்படுத்துவது. இவை பல்வேறுவிதமான மூலங்களுடன்
தொடர்புபட்டனவாகக் காணப்படும். அவை தனிமனித மற்றும்
குழுவினரின் அடையாளங்கள், ஒழுக்கம், சமயம், அரசியல் ஒழுங்கு
முறைகள், பாலியல் ரீதியான அனுபவம், பால்நிலை மற்றும்
அழகியல் பெறுமானம் என்பனவாகும். கலையின் மூலம் ஒன்றைப்
படைப்பதும் அதனூடாக அக்காலத்தை பற்றிய விளக்கத்தை
நோக்கி நகர்த்துவதும் அடிப்படையானது. இதன் மூலம் பண்பாட்டு
ரீதியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வது நோக்கமாகும். நாங்கள்
கலையை சர்வதேச ரீதியான மனிதப் பெறுமானத்தை வெளிப்
படுத்துவதாகக் கருதி அதற்கு மதிப்பளிக்கின்றோம். கலை உலகப்
பொதுமையானதாக விளங்குவதால் எந்தவொரு குறிப்பான
இடத்திலும் கட்டி வைக்கப்படக்கூடியதல்ல.