dc.description.abstract |
உலகமயமாக்கல் என்னும் கருத்து சமகாலத்திய வரலாற்றுச்
சூழலுக்கு உரிய நிகழ்வாக உள்ளது. இந்நிகழ்வு தெற்காசிய
மக்களுக்கும் அறிஞர்களுக்கும் முழுக்க புதியதோ புரிய முடியாததோ
அல்ல. முதலில் நான், உலகமயமாக்கலை| உலகின் இப்பகுதியில்
உள்ள நாடுகளில் ஷமரபும் நவீனமயமாக்கலும்| என்ற நிகழ்வுகளுக்கு
இடையிலான நீண்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அடையாளம்
காட்ட விரும்புகிறேன். தெற்காசிய நாடுகள், தங்களால் பெரிதும்
பேணப்பட்டு வந்த பழமையான மத, மொழி, பண்பாடு குறித்த
மரபுகளுடன், நவீனமயமாக்கலில் நீண்ட அனுபவத்தைக்
கொண்டிருக்கின்றன என்பதனை இங்கு நான் ஞாபகப்படுத்திக்
கொள்ள விரும்புகிறேன். தெற்காசியாவில் நடைபெறும் மரபுகளுக்கும்
நவீனத்திற்கும் இடையிலான விவாதம், ஆழமான வலிகளை
உள்ளடக்கிய காலனிய காலம், தெற்காசிய விழிப்புணர்வுக் காலம்,
சுதந்திரத்திற்கான போராட்டங்கள், இறுதியாக நாட்டுவிடுதலைக்குப்
பிறகான பின்னைக் காலனியச் சூழல் என்ற நெடிய பலபடித்தான
வரலாற்றைக் கொண்டதாக அமைந்துள்ளது. |
en_US |