Abstract:
ஒப்பிலக்கிய அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
ஒப்பிலக்கிய ஆய்வுவழி பெற்றுக்கொள்ளப்படும் முடிவுகள்,
படைப்பாளிகளின் இலக்கிய ஸ்தானத்தை அறிவதற்கு முக்கிய
மானவை. ஒரு படைப்பாளியை, பிற படைப்பாளிகளுடன் ஒப்பிடுகின்ற
பொழுதுதான் குறித்த அப்படைப்பாளியின் தனித் தன்மைகள்
உண்மையில் துலாம்பரமாகத் தெரியவருகின்றன. காணப்படும்
ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் இருக்கின்ற வேறுபாடுகள், அவனது
உண்மை ஆளுமையைத் தரிசிப்பதற்கு வழி செய்கின்றன.