Abstract:
மாணவர்களது கற்றல் செயற்பாடுகளில் பெற்றோரின் பங்களிப்பானது இன்றியமையாததாகும். மாணவர்கள் கற்றலில் வெற்றி பெறுவதற்கு பெற்றோர் சார்ந்த குடும்பக்காரணிகள் முதன்மை வகிக்கின்றன. பிள்ளைகளின் கற்றல் அடைவு மீது பெற்றோர்களின் போதிய கல்வியறிவின்மை, அக்கறையின்மை, பொருத்தமற்ற வீட்டுச்சூழல், வேலைப்பழு, வறுமை, பெற்றோர் வெளிநாடு செல்லல் போன்ற பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. ஆய்வுப் பிரதேசத்தில் சிரேஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுகளில் பெற்றோரின் பங்களிப்பு பற்றிய பிரச்சினைகள் முக்கியமானவை. இவ் ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேசத்தை மையமாகக் கொண்டமைந்தது. மண்முனை வடக்குக் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட உயர்தரப் பிரிவு காணப்படும் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆறு அதிபர். ஐம்பது வகுப்பாசிரியர்கள், ஐம்பது மாணவர்கள் மற்றும் ஐம்பது பெற்றோர் ஆகியோரிடமிருந்து தரவுகள், ஆய்விற்கான வினாக்கொத்து, நேர்காணல், தகவல்கள் பெறுவதற்கு போன்ற ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. பண்பு நிலைத் தகவல்கள் Ms Office Excel மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இவ் ஆய்வுப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பிள்ளையின் கற்றல் அடைவு மீதான பெற்றோரின் பங்களிப்பானது எதிர்மறையானதாகவே காணப்படுகின்றது. பெற்றோருடைய பங்களிப்பிலுள்ள பிரச்சினைகள் பிள்ளைகளின் கற்றலை ஆழமாகப் பாதிப்பதோடு கற்றல் அடைவு மீது அதிக பின்னடைவையும் ஏற்படுத்துவதாகவுள்ளது. பெற்றோரின் நேர்மறையானதாக பங்களிப்புகளை எனவே கற்றலில் மாற்றுவதற்குரிய செயற்பாடுகளையும், சூழலையும் மேம்படுத்தும் போது மாணவர்களது கற்றல் அடைவுகளை அதிகரிக்க முடியும் என்பது ஆய்வாளரின் எதிர்பார்ப்பாகும்.