Abstract:
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்து "பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அதிபரின் போதனா தலைமைத்துவத்தின் செல்வாக்கு" எனும் தலைப்பில் இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. இவ்வாய்வானது அதிபரின் போதனா தலைமைத்துவத்தின் தற்போதைய நிலைமை, செயற்பாடுகள் குறித்தும். அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளை முன்மொழிவதை பிரதான நோக்கமாகக் கொண்டு, பசறை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேச பாடசாலைகளிலிருந்து வசதி மாதிரி தெரிவின் மூலம் 05 பாடசாலைகளும், பாடசாலையின் 05 அதிபர்களும், 50 உயர்தரப் பாட ஆசிரியர்களும், 339 உயர்தர மாணவர்களிடம் இருந்து 5.1 எனும் விகிதத்தில் 63 மாணவர்களும் படையாக்கப்பட்ட மாதிரி தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாதிரிக்கு தேவையான தரவுகளைப் பெறுவதற்காக வினாக்கொத்துகள், நேர்காணல் படிவம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபடங்கள் என்பவற்றில் குறித்துக் காட்டப்பட்டள்ளன. தரவுகளின் பகுப்பாய்விலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளாக அதிபர்கள் திருப்திகரமான போதனா தலைமைத்துவத்தை வெளிப்படுத்தாமை, வினைத்திறனான கற்றல், கற்பித்தலை திட்டமிடாமை, நவீன கற்றல் கற்பித்தலை செயற்படுத்துவதில் தாமத நிலை. முறையான கலைத்திட்ட சீராக்கமின்மை, உள்ளக மேற்பார்வை திறம்பட இல்லாமை, பாரபட்சம். ஆசிரியர்களின் வாண்மை விருத்தி அபிவிருத்திக்கு உதவுதல் குறைவு. முகாமைத்துவ கருமங்களை திட்டமிடுதலிலும், அமுல்படுத்துவதிலும் சிரமத்தை எதிர்கொள்கின்றமை, பெற்றுக் வளங்களை கொள்வதில் ஆர்வம். அக்கறையின்மை போன்ற பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் தலைமத்துவமிக்க பாதிப்படைவதோடு கற்பித்தல் கற்றல் செல்வாக்கும் அதிபரின் போதனா விமர்சிக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டு அவற்றுக்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.