dc.description.abstract |
இலங்கையில் தொடர்ந்து காணப்படும் அரசியல் உறுதியற்றத்தன்மை காரணமாக பொருளாதாரங்களிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஆட்சி மாற்றங்களின்போது அரச செலவினங்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த இவ்வாய்வானது 1995-2021 ஆம் ஆண்டு வரையான காலத்தொடர் தரவினை பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கத்தை அடைந்துக்கொள்ளும் பொருட்டு அரச பொதுச் செலவினம் சார்ந்த மாறியாகவும் அரச வருமானம், பொருளாதார வளர்ச்சி வீதம், தலா வருமானம், அரச பொதுப்படுகடன், சனத்தொகை, பணவீக்கம் மற்றும் 1995-2021 ஆம் ஆண்டு வரையான ஆட்சி மாற்றங்கள் சாராமாறியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இங்கு ஆட்சி மாற்றமானது போலி மாறியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாறிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் பரீட்சிப்பதற்காக வரைபடங்களும் பொருளியலளவை நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அலகுமூல சோதனை, கூட்டு ஒருங்கிணைபு சோதனை, வழுச்சரிப்படுத்தல் மாதிரியுரு போன்ற பொருளியலளவை நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி, அரச செலவினம் மற்றும் சாரா மாறிகளான அரச வருமானம், பொருளாதார வளர்ச்சி வீதம், தலா வருமானம், அரச பொதுப்படுகடன், சனத்தொகை,பணவீக்கம் என்பவை ஆட்சி மாற்றங்களின் போதான போக்கானது. அரச செலவு அதிகரித்து செல்வதனையும் அரச வருமானம் குறைந்து வந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், தலா வருமானம் என்பன தளம்பல் நிலையில் உள்ளதனையும் சனத்தொகை, பொதுப்படுகடன் அதிகரித்து செல்லும் போக்கினையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் அரச செலவிற்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியானது சீரான முறையில் இல்லை என்பது முடிவாகும். சில காலங்களில் பொருளாதார வளர்ச்சி, தலா வருமானம் என்பன மறைப்பெறுமானத்தைப் பெற்றுள்ளது. மேலும் ஆய்வின் முடிவுகளின்படி, அரச வருமானம், பொருளாதார வீழ்ச்சி வீதம் என்பன நீண்ட காலத்தில் புள்ளிவிபர ரீதியாக எதிர்கணிய தாக்கத்தை செலுத்துவதோடு, தலா வருமானம், அரச பொதுப்படுகடன், பணவீக்கம் என்பன நீண்டகாலத்தில் புள்ளிவிபர ரீதியாக நேர்கணிய தாக்கத்தை செலுத்துகின்றது. சனத்தொகை எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை. அதேபோல் அரச வருமானம் குறுங்காலத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை. சனத்தொகை,பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி வீதம் அரச பொதுப்படுகடன், என்பன குறுங்காலத்தில் தாக்கத்தை செலுத்துகின்றது. மேலும் மாறிகளுக்கிடையில் கூட்டு ஒருங்கிணைபு தொடர்பு காணப்படுவதுடன் தெரிவு செய்யப்பட்ட மாதிரியுரு சிறந்த மாதிரியுருவாகவும் காணப்படுகின்றது. மேலும் ஆட்சி மாற்றம் அரச செலவினத்தில் தாக்கம் செலுத்துகின்றது. ஆகவே அரசு செய்கின்ற செலவானது வருமானம், வேலைவாய்ப்பு, உற்பத்தி என்பவற்றை அதிகரிப்பதோடு அது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இருக்கவேண்டும் |
en_US |