dc.description.abstract |
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்ற காரணிகளுள் ஊழியப்படை பங்குபற்றல், மூலதனவாக்கம், பணவீக்கம், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நாணயமாற்று வீதம் ஆகியன முக்கியமானதாக காணப்படுகின்றன. காலத்திற்கு காலம் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் அல்லது இடர்பாடுகளினால் மேற்குறித்த மாறிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இம்மாறிகள் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு 1991-2021 வரையிலான தரவுகளை வருடாந்த தரவுகளாகக் கொண்டு ஆராய்வதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இங்கு பொருளாதார வளர்ச்சி சார்ந்த மாறியாகவும், ஊழியப்படை பங்குபற்றல் பிரதான சாரா மாறியாகவும் ஏனைய மாறிகளான வெளிநாட்டு நேரடி முதலீடு, நாணயமாற்று வீதம், பணவீக்கம் மற்றும் மொத்த மூலதனவாக்கம் போன்றன துணை சாரா மாறிகளாகவும் அமைந்துள்ளன. இவ்வாய்வில் ARDL மாதிரியுரு, ECM மாதிரியுரு என்பன பயன்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதற்கமைய ஊழியப்படை பங்குபற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கிடையிலே நீண்டகாலத்தில் எதிர்க்கணியத் தொடர்பும் குறுங்காலத்தில் நேர்க்கணியத் தொடர்பும் காணப்படுகின்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாறிகளுக்கிடையில் கூட்டு ஒருங்கிணைவுத் தொடர்பு காணப்படுவதுடன் தெரிவு செய்யப்பட்ட மாதிரி சிறந்த மாதிரியாகவும் காணப்படுகிறது. |
en_US |