dc.description.abstract |
தற்காலத்தில் அரசியல் கட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நோக்கப்படுகின்றது. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வாக்குரிமை, பிரதிநிதித்துவ ஆட்சியியல் என்பன வளர்ச்சியடைய ஆரம்பித்தன. பாராளுமன்ற அரசாங்க முறையின் வளர்ச்சியோடு கட்சிகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. அந்தவகையில் இலங்கையின் மூன்றாவது தேசியக் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி விளங்குகின்றது.
இக்கட்சி ஆரம்பத்தில் இடதுசாரிக் கொள்கையினை தீவிரமாக முன்னெடுக்கும் அமைப்பாக விளங்கியது. 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் அரசுக்கெதிரான ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அதனால் ஏற்பட்ட பாரிய பின்னடைவு ஜனநாயக அரசியல் போக்குடன் செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது. 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனநாயக போக்குகளை கையாளுவதில் அக்கறை செலுத்தியது. ஆரம்பத்தில் கடைப்பிடித்த கொள்கைகளை தவிர்த்து ஜனநாயக சார்ந்த கொள்கைகளை உருவாக்கி கொண்டது.மேலும் தேர்தலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு 2001, 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு 39 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக இக்கட்சி வீழ்ச்சியினை அடையத் தொடங்கியிருந்த போதும் இக்கட்சியின் அரசியல் கலாசார முறை இலங்கை அரசியலினைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்று விளங்குவதனை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி தொடர்பான அச்சவுணர்வு மக்களிடையே காணப்பட்டதுடன் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இக்கட்சியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் முறை, கொள்கை, கட்சியின் வளர்ச்சி, பிளவு, ஜனநாயக்கத்துக்கான முன்னேற்றகரமான செயற்பாடு என்பன குறித்து விமர்சன முறையில் நோக்குவதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. இவ் ஆய்வுக்கான தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகள் மூலம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. |
en_US |