Abstract:
இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை எட்டு ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இறுதியாக இடம்பெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலானது கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தேர்தலாக அமைந்திருந்தது.
இலங்கையில் இதுவரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் சிறுபான்மையினரின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாய் அமைந்திருந்தன ஆனால் கோத்தாபாய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியானது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் மூலம் நாட்டின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்க முடியும் என்ற எண்ணப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றது இதனடிப்படையில், இவ் அத்தியாயமானது கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தாபாய ராஜபக்ஷ வெற்றியடைவதற்கு செல்வாக்கு செலுத்திய பௌத்த மதவாத அமைப்புக்களின் செல்வாக்கினை கண்டறிவதாக அமைந்துள்ளது.