Abstract:
இடப்பெயர்வானது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ நகருகின்ற செயற்பாடாகும். கிராம நகரம், நகரம் நகரம், நகரம்- கிராமம், நாடு நாடு, வலயம் வலயம் மற்றும் உலகம் முழுவதும் நிகழக்கூடிய ஒன்றாக இவ் இடப்பெயர்வானது காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி இடப்பெயர்வதை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரத்தை மையமாகக் கொண்டு ஏற்படுகின்ற நகர்வினை ஆராய்வதாக அமைந்துள்ளது.
இவ்வாய்வின் நோக்கமாக கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வினையும், அது சார்ந்த காரணிகளை கண்டறிவதும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுப் பிரதேசத்தின் இடப்பெயர்வு பரம்பலைக் கண்டறிவதோடு அதற்கான தீர்வினை பெறுதல் என்பதை நோக்கமாகக் கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான தரவானது கலப்பு முறையில் சேகரிக்கப்பட்டுள்ளது. வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் அளவு ரீதியாகவும், நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகளை பண்பு ரீதியாகவும் வரைப்படங்கள், அட்டவணைகள், ஒளிப்படங்கள் மூலம் விவரணம் செய்யப்பட்டதோடு ஒப்பிட்டும் ஆராயப்பட்டுள்ளது. இவ் முறையியலை பயன்படுத்தி பெறப்பட்ட பெறுபேறாக ஆய்வுப் பிரதேசத்தில் இடப்பெயர்வினை ஏற்படுத்தும் காரணிகளான இயற்கை அனர்த்தம், வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, வறுமை, குடும்பச்சூழல், தொற்றுநோய், வளப்பற்றாக்குறை போன்ற காரணிகளால் மக்கள் நகரத்தை நோக்கி நகர்வினை மேற்கொள்கின்றனர் என்றும், அவர்கள் அதிகளவில் தற்காலிக இடப்பெயர்வினையே மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாய்வின் முடிவாக ஆய்வுப் பிரதேசத்தில் ஏற்படுகின்ற இடப்பெயர்வானது ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படுகின்ற குறைப்பாடு காரணமாகவே நகரத்தை நோக்கி தற்காலிக இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் ஆரம்பத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை விடவும் ஆய்வுப் பிரதேசத்தில் இடப்பெயர்வுக் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வரமுடிந்தது. இவ்வாய்வின் பரிந்துரையாக ஆய்வுப் பிரதேசத்தில் நிகழும் இடப்பெயர்வுக்காரணமாக ஏற்படும் மாற்றங்களை குறைப்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், சுய தொழில் வாய்ப்பு, அரச உதவிகளை வழங்கல், வளத்தினை சரியாக பெற்றுக் கொடுத்தல், இயற்கை அனர்த்ததினை குறைத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் பரிந்துரையாக கூறப்பட்டுள்ளது.