Abstract:
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர்
பிரிவுகளின் நீரின் தரநிலை தொடர்பான ஓர் இட ரீதியான பகுப்பாய்வு எனும்
தலைப்பில் இவ் ஆய்வு அமைந்துள்ளது. ஆய்வின் பிரதான நோக்கமாக பூநகரி
பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளின் நீரின்
காரகடினத்தன்மை, மின்கடத்துதிறன், நீரில் கரைந்துள்ள மொத்த திண்மங்கள்,
உவர் தன்மையின் தரநிலையை பகுப்பாய்வு செய்வதோடு நீரின்
கிடைப்பனவினையும், நீர் பிரச்சினை ஏற்படும் காரணங்களையும் கண்டறிந்து,
அப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைத்தல் ஆய்வின் உபநோக்கங்களாக
காணப்படுகின்றது. நீரின் தரநிலையை இடரீதியாக பகுப்பாய்வு செய்வதற்கும்
முதலாம் நிலைத் தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முலதலாம் நிலைத் தரவுகளாக நேரடி அவதானம், நேர்காணல், பரிசோதனை,
வினாக்கொத்து ஆகிய முறைகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பூநகரி பிரதேச
அறிக்கை, நீர்ப்பாசனத் திணைக்கள அறிக்கை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
நீரின் தரநிலையை கண்டறிவதற்காக 54 நீர் மாதிரிகள் தெரிவு செய்து
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நீரின் இடரீதியிலான பரம்பல் Arc GIS
மென்பொருளினை பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து WHO வின் ph
நிர்ணய அளவு 6.5-8 ஆக காணப்படுகின்றது. ஆயினும் ஆய்வு பிரதேசத்தில்
முழங்காவில் (7.3u/cm) கிராஞ்சி(7.3u/cm) போன்ற பகுதிகளில் இந்த அளவு
WHO, SL நியம அளவை விட ph குறைவாக காணப்படுகின்றது. TDS இனை
அவதானிக்கும் போது WHO வின் ஆகக் கூடிய நிலை 600 ஆகவும் இலங்கையின்
தரநிலை 500 ஆகவும் காணப்படுகின்றது. ஆய்வுப்பிரதேசத்தின் சராசரி அளவு
699.41 ஆக காணப்படுகின்ற போதிலும் ஆகக் கூடிய அளவு 1820 ஆக
கிராஞ்சியில் பதிவாகியுள்ளது. இது நீரின் தரநிலை மிகவும் கீழான நிலையில்
பருகுவதற்கு உகந்ததாக அல்லாமல் இருப்பதனைக் காட்டுகின்றது. மேலும்
மின்கடத்து திறனின் WHO நியம 0.75-3.53u/cm ஆகக் காணப்படுகிறது. ஆய்வுப்
பிரதேசத்தில் 0.9 u/cm தொடக்கம் 6.3u/cm ஆகக் காணப்படுகின்றது. முழங்காவிலின்
6.37 ஆக உயர்வடைந்து காணப்படுகின்றது. இவற்றோடு நீர்
பிரச்சினைகளுக்கான காரணங்களாக கிராஞ்சி, வலைப்பாடு நீர் விநியோகத்
திட்டம், கிணறுகளின் முறையற்ற பயன்பாடுகளும் காணப்படுவதுடன்,
அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக பாதுகாப்பான முறையில் கிணறுகளை
அமைத்தல், புதிய நீர் வழங்கல் திட்டத்தை உருவாக்குவதன் மூலம்
ஆய்வுப்பிரதேசத்தின் நீர்வளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.