dc.description.abstract |
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் வறுமை நிலை ஓர் இடரீதியான பகுப்பாய்வு." எனும் தலைப்பில் ஆய்வுக் கேட்டுரையானது சமர்ப்பிக்கப்படுகின்றது. வடமராட்சி கிராம சேவகர் பிரிவில் பதினெட்டு கிராமசேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து கிராமசேவகர் பிரிவுகளில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமசேவகர் பிரிவுகளுக்கிடையே வறுமைநிலையானது இடரீதியாக வேறுபட்டு அமைவதனை அவதானிக்கலாம். இவ்வாய்வானது ஆய்வுப் பிரதேசத்தின் வறுமை நிலை அதனோடு தொடர்புடைய சமூக, பொருளாதார நிலையினை இனங்கண்டு இடரீதியான பகுப்பாய்வை மேற்கொண்டு வறுமை ஒழிப்பிற்கான தீர்வுகளை முன்வைத்து எதிர்காலத்தில் அப்பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்வடையச் செய்தலே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில் தரவுகள் முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவானது, எளியஎழுமாற்று முறையில் 94 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு ஐந்து கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள பன்னிரண்டு கிராமங்களுக்கும் வினாக் கொத்துக்கள் மூலமும் மற்றும் நேரடி அவதானிப்பு மூலமும், நேர்காணல் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டு இத்தரவுகள் அளவைசார் மற்றும் பண்புசார் மற்றும் விபரணரீதியான வகையில் Excel, Arc GIS 10.4 பயன்படுத்தி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட முடிவுகளின் ஆய்வுப்பிரதேசத்தில் உள்ள வறுமைநிலையை அடையாளம் காண்பதற்காக வீட்டின் உரிமை, வீட்டின் தன்மை, குடும்ப தலைமைத்துவம், போக்குவரத்துநிலை, அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய கொடுப்பனவுகள், குடிநீர் வசதி, வருமானம், கல்வி ஆகிய மாறிகளின் ஊடாக இடத்திற்கிடம் காணப்பட்ட வறுமை நிலையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக ஆய்வுப்பிரதேசத்தில் அம்பன் பகுதியை விட மணற்காடு. பொற்பதி, குடத்தனை, குடத்தனை வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் வறுமை நிலையினை அதிகம் கொண்டுள்ள பகுதிகளாகும். அந்தவகையில் மக்களிடையே நிரந்தர தொழிலின்மை, குறைவான கல்விவசதிகள், சுகாதார வசதிகள் குறைவாக காணப்படல், பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படல், சுயதொழில் செய்வதற்கான உதவிகள் இன்மை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் உதவிகள் கிடைக்கின்ற போதும் வறுமையாளர்களின் விகிதாசார மின்றி பகிர்ந்தளிக்கப்படுதல் போன்றன காரணங்களே வறுமைநிலை இடரீதியாக வேறுபடுவதற்கான காரணங்களாக அமைந்துள்ளது. எனவே ஆய்வுப் பிரதேசத்தில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், சமுர்த்தி கொடுப்பனவினை வழங்கல், கல்வி, சுகாதார வசதிகளை அதிகரித்தல் போன்றவற்றின் மூலம் வறுமைநிலையினை குறைக்க முடியும். |
en_US |