dc.contributor.author |
திருச்செல்வி, பாலசுப்ரமணியம் |
|
dc.date.accessioned |
2024-09-06T05:41:18Z |
|
dc.date.available |
2024-09-06T05:41:18Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1281 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15672 |
|
dc.description.abstract |
மலையகப் பகுதிகளில் காணப்படுகின்ற குடியிருப்பு முறையாக பெருந்தோட்ட
குடியிருப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது. "பதுளை மாவட்ட வெலிமடை
பிரதேசத்தின் குடியிருப்பு பாங்கும் அது சார்ந்த பிரச்சினைகளும்” எனும் தலைப்பில்
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிமடை பிரதேசத்தின் குடியிருப்பு
பாங்கினைக் இனங்காணுவதை பிரதான நோக்கமாகவும் இக் குடியிருப்பில்
காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதை
உப நோக்கமாகவும் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த
வகையில் ஆய்வுப் பிரதேசத்தில் நேர்கோட்டு, சந்தி குடியிருப்புக் கோலங்களில்
லயன் மற்றும் தனிக் குடியிருப்புக்களை கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஆய்வு
பிரதேசத்தில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆய்விற்காக முதலாம்,
இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிமடை பிரதேசத்தில் 7
கிராம சேவகப் பிரிவுகளிலுள்ள குடும்பங்களில் 2% சதவீத குடும்பங்களுக்கு
எழுமாற்றுமுறையில் 84 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன.
இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் Microsoft Excel மென்பொருள் மற்றும் Arc GIS 10.7.1
மூலம் 2013 மற்றும் 2023 இற்கான நிலப்பயன்பாட்டு மாற்றத்தில் தேயிலை நிலம்
114.06 ஹெக்டெயர் அளவு அழிக்கப்பட்டள்ளமையையும் குடியிருப்பு நிலம் 19.5
ஹெக்டெயர் அளவு அதிகரிக்கப்பட்டள்ளமையையும் அறிந்துக் கொள்ள முடிந்தது.
நிலப்பயன்பாட்டு மாற்றமானது பத்து வருடங்களுக்குள் மாற்றம் அடைந்துள்ளமை
கண்டறியப்பட்டது. விவசாயம், குடியிருப்பு போன்றனவற்றின் பயன்பாடு
அதிகரித்துள்ளதோடு, லயன் மற்றும் தனிக் குடியிருப்பு பல்வேறுப்பட்ட பௌதீக,
சமூக, பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளைக் கொண்டு காணப்படுகின்றது.
பொருத்தமான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை
விருத்தி செய்தல் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்
போன்றவற்றினை பிரச்சினைகளுக்கான பரிந்துரைகளாக கொள்ளலாம். இவ்வாறான
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு குறித்த நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும்
ஏனைய துறைகள் முயற்சிகளை எடுத்தல் அவசியமாகும். எனவே
இவ்வாய்வறிக்கையை வாசிக்கும் சகல வாசகர்களையும் பதுளை மாவட்ட
வெளிமடை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட
கிராம சேவகப் பிரவுகளில் குடியிருப்பு பாங்கு எவ்வாறு காணப்படுகின்றது. அதில்
காணப்படுகின்ற பிரச்சினைகளை இவ் ஆய்வினை வாசிக்கும் வாசகர்களுக்கு
விளங்கிக் கொள்ளக் கூடியவாறு காணப்படும். |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
குடியிருப்பு பாங்கு |
en_US |
dc.subject |
பெருந்தோட்டம் |
en_US |
dc.subject |
லயன் |
en_US |
dc.subject |
பிரச்சினைகள் |
en_US |
dc.title |
பதுளை மாவட்ட வெலிமடை பிரதேசத்தின் குடியிருப்பு பாங்கும் அது சார்ந்த பிரச்சினைகளும் |
en_US |
dc.type |
Thesis |
en_US |