dc.description.abstract |
ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பகுதியான நுவரெலியா மாவடமானது மழைவீழ்ச்சியின் சீரற்ற போக்கினால் அதிகமாக பாதிப்படைந்து வருகின்றது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும் இதனால் நுவரெலியா மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதார ரிதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மழை அதிகமாக கிடைக்கின்ற காலங்களிலே மழைவீழ்ச்சியின் செறிவு அதிரிக்கின்றபோது வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. அதேபோன்று மழைவீழ்ச்சி குறையும் சந்தர்ப்பங்களிளும் வறட்சி ஏற்படுகின்றது. அதேபோன்று ஆய்வுப் பிரதேசத்தில் உயரமான பகுதிகள் அதிகம் என்பதால் அதிக மழைவீழ்ச்சி காலங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றது அதன்படி இப்பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட இவ்வாய்வின் பிரதான நோக்கமாக நுவெரலியா மாவட்டத்தின் மழைவீழ்ச்சியினை இட மற்றும் கால ரீதியாக பகுப்பாய்வு செய்வதும் படமாக்குதலும் காணப்படுகின்றது. அதன்படி, ஆய்வுப்பிரதேசத்தில் மழைவீழ்ச்சியின் பாங்கானது, இவ்வாய்விற்கு தெரிவு செய்யப்பட்ட 10 மழைவீழ்ச்சி நிலையங்களினை மையமாகக் கொண்டு இவ்வாய்வு நகர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு, இறுதியாக மழைவீழ்ச்சியின் அதிகரிப்பு மற்றும் குறைவினால் ஏற்படும் பாதிப்புக்களினை இழிவளவாக்குவதற்கான நடைமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வானது அளவு ரீதியான ஆய்வாக நோக்கப்படுகின்றது.
ARC GIS 10.4.1 தொழிநுட்பத்தினை பயன்படுத்தி மழைவீழ்ச்சியின் இட மற்றும் கால ரீதியான பாங்கு படமாக்கப்பட்டுள்ளதோடு ஆய்வுப் பிரதேசத்திற்கான சனத்தொகை , இட அமைவு படம், தரைத்தோற்றம், மண், மழைவீழ்ச்சி நிலையங்கள் போன்ற படங்கள் தயாரிக்கப்படுள்ளன. இவ்வாய்விற்காக நியம விலகல், மாறுதன்மை குணகம், வருடாந்த சராசரி, 03 வருட நகரும் சராசரி, மான்கண்டோல் முறை, சென்னின் சாய்வு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
இட ரீதியான போக்கினை நோக்கும்போது, கெனில்வெர்த் மழைவீழ்ச்சி நிலையத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 5472.9mm. மிகக்குறைவான மழைவீழ்ச்சியினை மஹா ஊவா தோட்டம் மழைவீழ்ச்சி நிலையம் பெற்றுள்ளது இந்நிலையத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1696.4 mm. 3776.5 வீச்சுப்பெறுமானமாக mm. அனைத்துப் பருவகாலங்களையும் காட்டிலும் தென்மேல் பருவகாலத்திலேயே அதிக மழைவீழ்ச்சியினைப் பெற்றுக் கொள்கின்றது என்பது இவ்வாய்வின் மூலம் எடுத்துரைக்கப்பட்ட முடிவாகும். |
en_US |