dc.description.abstract |
இலங்கையில் நகர வெள்ளப்பெருக்கு அனர்த்தம் அதிகரித்து வருகின்றமையும், இதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவின் நகர வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தையும், அதன் தாக்கத்தையும் மதிப்பிடல் எனும் பிரதான நோக்கத்தையும், ஆய்வுப் பிரதேசத்தின் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தின் கால, இட ரீதியான பங்கினை கண்டறிதல், நகர வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை தோற்றுவிப்பதற்கான காரணங்களை கண்டறிதல், நகர வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சார் தாக்கத்தை மதிப்பிடுதல் மற்றும் ஆய்வுப் பிரதேசத்தில் ஏற்பட்டு வருகின்ற நகர வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கான முகாமைத்துவ செயற்பாடுகளை கண்டறிதல் என்கின்ற உபநோக்கங்களையும் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஆய்வானது, முதலாம் நிலைத்தரவுகளான, நேரடி அவதானிப்பு, நேர்காணல், கலந்துரையாடல், வினாக்கொத்து ஆகியவற்றையும், இரண்டாம் நிலைத்தரவுகளான மழைவீழ்ச்சித் தரவு, கடந்த கால வெள்ள நிலமைத்தரவுகள், நிலப்பயன்பாட்டு தரவுகள், குடித்தொகைத்தரவுகள் என்பனவும் பெறப்பட்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் மூலம் பெறப்பட்ட தரவுகள் விபரண ரீதியாகவும், வினாக்கொத்து மற்றும் அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் MS EXCEL தரவுத்தளம், OSM மற்றும் Arc GIS என்பவற்றின் ஊடாக பகுப்பாய்விற்கு உட்படுத்தி ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டுள்ளது. பகுப்பாய்விற்கு அமைவாக ஆய்வுப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக வெள்ளம் ஏற்படுவதாகவும், தற்போது வெள்ளப்பெருக்கின் தீவிரத்தன்மை புத்தளம் கிழக்கு, தில்லைடிய மற்றும் சேனகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் அதன் தீவிரத்தன்மை உயர்வாகவும் காணப்படுகின்றமை குறிப்பிட்டதக்கது.
ஆய்வுப் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்தும் இயற்கை காரணிகளாக மழைவீழ்ச்சி, சாய்வு தன்மை, தரையுயர வேறுபாடு, தாவரப்போர்வை குறைவு, கடல் வற்று பெருக்கு செயற்பாடு, வடிகால் பாங்கு என்பனவும், மானிடகாரணிகளில் நகர நிலப்பயன்பாடு, முறையற்ற கால்வாய் அமைப்பு, திட்டமிடப்படாத வீதி அபிவிருத்தி, கால்வாய்களை அண்மித்த வீடுகள் என்பன உயர் செல்வாக்கு செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஆய்வுப் பிரதேச மக்களின் உடமை மற்றும் சொத்துக்கள் சேதமடைவதுடன், இடப்பெயர்வினையும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டவகையில் கால்வாய் நிர்மானிப்பு, குளங்களை தூர்வாறுதல், திட்டமிட்டு வீதி அமைத்தல், மக்கள் சட்டவிரோத குடியிருப்பை அகற்றல் ஆகிய செயற்பாடுகள் மூலம் நகர
வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை கட்டுப்படுத்தலாம். |
en_US |