Abstract:
நகர்ப்புறங்களின் விரைவான விரிவாக்கம் தற்போது இலங்கை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும். நாவலப்பிட்டி நகர சபைப் பகுதியில் நகர விரிவாக்கம் சார்ந்த சவால்களை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும். கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி நகர சபைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு நகர மையப் புறப் பகுதிகளை தெளிவாகக் காட்சிப்படுத்துவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. முதன்மை தரவு மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டன. முதன்மை தரவு பகுப்பாய்வின் கீழ், நகரத்தில் வசிப்பவர்கள், கடை உரிமையாளர்கள் நேர்காணல் மூலம், தேசிய இயற்பியல் திட்டம், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், ARS முறையிலான வரைபடங்கள் போன்றவை இரண்டாம் நிலை தரவுகளாக ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன. பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நகர பாங்கினை கண்டறிதல், நகர விரிவாக்கம் அடையாமைக்கான காரணங்களை அடையாளம் காணுதல், நகர வளர்ச்சியினை சிறப்பாக மேற்கொள்வதற்கான தீர்வுகளை முன்வைத்தல் என்பன இவ்வாய்வின் கீழ் ஆராயப்படுகின்றது. இந்நகரம் வளர்ச்சி அடையாமைக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் கண்டறியப்பட்ட உண்மைநிலை, பொருளாதார பற்றாக்குறையாகும். நாவலப்பிட்டிய நகரத்தில் வளங்கள் காணப்படுகின்றன. அதனை சிறப்பான முறையில் கையாள்வதற்கான கல்வி கற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட மனிதவள பற்றாக்குறையை இதற்கு காரணமாகும். முடிவாக இந்நகர வளர்ச்சிக்கு சவாலாக உள்ள காரணிகள் பௌதீக மற்றும் பண்பாட்டுக் காரணிகள, ஏனைய காரணிகள் வாயிலாக முன்வைக்கப்பட்டுள்ளன. செய்யப்பட்ட படங்களைக் கொண்டு நகர பங்கினை ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2009 2023 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்டு கூறக்கூடிய எந்த ஒரு அபிவிருத்தி செயல்பாடுகளும் முன்னெடுக்கவில்லை என்பதனை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்நகரத்தினை விரிவடைய செய்ய வேண்டும் என்றால் சிறந்த தொழில்நுட்பங்களை கையாண்டு நகரின் மேற்கு பகுதிகளில் திட்டங்களை முன்னெடுக்க முடியும். நகர எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி கைத்தொழில் தொடர்பான நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் ஏனைய நிறுவன மூலதனம, தொழில்நுட்ப அறிவு கொண்ட தொழிலாளர்கள் கிடைக்க பெறுவார்கள். இவர்களை கொண்டு நகரினை அபிவிருத்தி அடைய செய்ய முடியும்.ஆய்வின் பெறுப்பேறுகளாக அறியப்பட்டவை நகர பொருளாதாரம் இன்மை, இடவசதி பற்றாக்குறை, சனத்தொகை குறைவு, நகர வெள்ளம், காடுகளால் சூழப்பட்ட பகுதி, கைத்தொழில் வளர்ச்சி இன்மை, போன்ற காரணிகளால் நகர விரிவாக்கப்பட வில்லை என அறியப்பட்டது. இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து நகர வளர்ச்சியினை முன்னெடுத்து செல்வதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.