dc.description.abstract |
நெற்பயிர்ச்செய்கை மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி கமநல சேவை பிரிவில் நெற்பயிர்ச்செய்கையின் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களும் இப்பிரச்சினைகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ் ஆய்வின் பிரதான நோக்கமாக பிரதேசத்தின் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்தல், நெற் பயிர்ச்செய்கையின் உற்பத்தியினையும், ஆய்வு பிரதேசத்தில் நெற்பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வும் ஆலோசனைகளை முன்வைத்தல் போன்ற உப நோக்கங்களையும் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆய்வானது பண்புசார் முறையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக அமையப் பெற்றுள்ளது. ஆய்விற்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலை தரவுகளாக நேரடி அவதானிப்பு, கலந்துரையாடல், நேர்காணல் மற்றும் வினாக்கொத்து என்ற அடிப்படையிலும் இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆண்டறிக்கை, சஞ்சிகைகள் மற்றும் இணையதளங்கள் என்பவற்றிலிருந்தும் இருந்தும் பெறப்பட்டுள்ளன. உற்பத்தி ரீதியாக நீரினை குளத்தில் இருந்து 52 சதவீதமான விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். இருப்பினும் சொந்தக்காணியில் 57.64 சதவீதமானவர்களும் குத்தகைக்காணியில் 42.35 சதவீதமானவர்களும் நெல் உற்பத்தியினை மேற்கொள்கின்றனர். மூலதனப்பற்றாக்குறை காரணமாக சதவீதமான 74 விவசாயிகள் கடனுதவிகளை பெற்று விவசாயத்தை மேற்கொள்கின்றனர். மேலும், தனியாரிடம் இருந்து விதையினங்களை 85 வீதமானவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன், சந்தைபடுத்தலில் இடைத்தரகர்கள் 81 வீதமானவர்களும் தொழிநுட்ப அறிவின்மையாளர்கள் 89 சதவீதமானவர்களும் காணப்படுகின்றமை நெற்பயிர்ச்செய்கையின் பிரச்சனையாக காணப்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வாக குறுகிய காலத்தில் அதிக அளவு விளைச்சலை தரக்கூடிய நெல்லினங்களை அறிமுகப்படுத்தல், விலை திட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளையும் சட்டரீதியாக மேற்கொள்ளுதல், நவீன இயந்திர சாதனங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல், நீர்வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான குளங்களை மீள்புனரமைப்பு செய்தல், குறைந்த வட்டியில் கடன்களை பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளினை முன்னெடுக்குமிடத்து ஆய்வுப் பிரதேசத்தில் விவசாயிகள் தற்போது எதிர்கொள்கின்ற சவால்களில்
இருந்து மீள முடியும் என நம்பப்படுகின்றது. |
en_US |