Abstract:
இலங்கையின் ஈரவலயத்தில் அமைந்துள்ள நுவரெலியா மாவட்டத்தில் பிரதான
பிரதேச செயலகங்களில் ஒன்றான அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச
செயலகங்களானது அதிகரித்த மழைவீழ்ச்சியை பெறுகின்ற பிரதான பகுதிகள்
ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு ஏற்படுகின்ற காலநிலை மாற்றமானது ஆய்வு
பிரதேசத்தில் மழைவீழ்ச்சியின் மாறுபாடுகளை பல்வேறு வகையில் ஏற்படுத்துகின்றது.
இவ் மாறுபாடுகளினால் சில தாக்கங்களையும் விளைவுகளையும் அனுபவித்து
வருகின்றது. இப் பிரச்சினையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட
இவ்வாய்வின் நோக்கம் பிரதேச செயலகத்தின் உட்பட்ட பிரதேசங்களில் ஏற்படுகின்ற
மழைவீழ்ச்சி மாறுபாடுகளையும் அதன் விளைவுகளையும் மதிப்பிடுதல் ஆகும்.
இவ்வாய்வின் உபநோக்கங்களாக ஆய்வு பிரதேசத்தில் மழைவீழ்ச்சி மாறுபாடுகள்
காலரீதியாகவும் இடரீதியாகவும் எவ்வாறு மாறுபடுகின்றது என அடையாளம்
காணுதல் ஆய்வு பிரதேசத்தில் மழைவீழ்ச்சியும் மாறுபாட்டால் ஏற்படுகின்ற
விளைவுகளை அடையாளம் காணல், மேலும் இவ்வாய்வு பிரதேசத்தில்
மழைவீழ்ச்சினுடைய மாறுபாட்டால் ஏற்படுகின்ற தாக்கங்களிலிருந்து விடுபட
எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என மதிப்பீடுதல் என்பன ஆகும்
இவ்வாய்வில்
பண்புரீதியான,
அளவுரீதியான
இரு
முறைகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தேவையான தரவுகள் முதலாம் நிலை தரவுகள்
ஆய்வு பிரதேசத்தின் விளைவுகளை கண்டறிவதற்க்கும் மற்றும் இரண்டாம்
நிலைத்தரவான வளிமண்டலவியல் திணைக்களத்திலிருந்து இருந்து பெறப்பட்ட ஆறு
மழைவீழ்ச்சி நிலையங்களில் தரவுகள் பெறப்பட்டு அளவியல் மற்றும் பண்பு ரீதியான
பகுப்பாய்வு முறைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுப் பிரதேசத்தின் காலரீதியான,
இடரீதியான மாற்றங்களை காண நியமவிலகல், மாறற்குணகம், குறைந்த மற்றும்
கூடிய மழைவீழ்ச்சி என்பன பகுப்பாய்வுக்காக மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்
பெறுபேறுகளின் அடிப்படையில் ஆய்வு பிரதேசமான அம்பகமுவ மற்றும் நோர்வூட்
பிரதேசசெயலக பிரிவுகளில் மழைவீழ்ச்சியின் அளவானது 1990களில் காணப்பட்டதை
விட தற்பொழுது குறைவாக காணப்படுகின்றது. ஆய்வு பிரதேசத்தின் இடரீயான
பகுப்பாய்வின் மூலம் அதிகரித்த மழைவீழ்ச்சியை வடபகுதியும் குறைவான
மழைவீழ்ச்சியை தென்பகுதியும் அனுபவிக்கின்றது. உதாரணமாக முறையே
வடப்பகுதியில் கெனில்வேர்த் அதிக மழைவீழ்ச்சியையும், கிழக்குப் பகுதியில்
மஸ்கெலியா பிரதேசமும் அனுபவிக்கின்றது. முன்னைய காலங்களை விட
மழைவீழ்ச்சியினுடைய அதிகரிப்பால் ஏற்படக்கூடிய விளைவுகளில் நிலச்சரிவு,
மண்ணரிப்பு, வெள்ளபெருக்கு போன்ற அனர்த்தங்கள் அதிகமாக நோர்வூட் பிரதேச
செயலகம் அனுபவித்து வருவதனையும் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.