Abstract:
சுற்றுலா என்பது எல்லா மக்களுக்கும் அவர்கள் சேவையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் முகமாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் ஆகும். சுற்றுலா துறையின் வகைகளில் பிரதானமான ஒன்றாக கலாச்சார சுற்றுலா விளங்குகின்றது அந்த வகையில் இவ்வாய்வானது தம்பள்கடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கலாசார சுற்றுலாவின் நிலை எவ்வாறு காணப்படுகிறது என்பதை பிரதான நோக்கின் அடிப்படையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலாசார சுற்றுலாவிற்கு வாய்ப்பான படங்களை படமாக்கள், கலாசாரம் மையங்கள் எதிர்கொள்ளும் தாக்கங்களை அறிதல் மற்றும் படமாக்கள் ஆகிய உள்நோக்கங்களையும் கொண்டுள்ளது. முதலாம் இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிப்பு முறையின் மூலம் Arc GIS, Google earth pro, maps me போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சுற்றுலாவுக்கு வாய்ப்பான பிரதேசங்கள் படமாக்கப்பட்டுள்ளது. எளிய எழுமாற்று முறை மூலம் 72 வினா கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகள் Excel மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல், கலந்துரையாடல், குவியக்குழு, கலந்துரையாடல் நுட்ப முறைகளை பயன்படுத்தி ஆய்வில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வில் தம்பன்கடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலாசார சுற்றுலாவுக்கு வாய்ப்பான இடங்கள் கண்டறியப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில் காணபப்படும் 27 சுற்றுலாத்தளங்கள் படமாக்கப்பட்டதுடன் 4 இடங்களான ஸ்ரீவிஜயராம விஹாரய, சோமாவதி தேவியின் உருவ சிலை, பௌத்த மண்டபம், தொல்பொருள் நூதனசாலை ஆகிய சுற்றுலாவுக்கு வளவாய்ப்பினை கொண்ட தளங்களாக அடையாளப்படுத்தப்படுள்ளன. கலாசார சுற்றுலா மையங்கள் எதிர்நோக்கும் தாக்கங்கள் எனும் போது சுற்றுலா தளத்தின் அமைவிடத்தன்மையும், சுற்றுலாத்தலங்கள் ஏற்படும் பிரச்சினைகளும் சுற்றுலாத்தலங்களில் பல்லுயிர் தன்மை பாதிக்கப்படுதல் மற்றும் சுற்றுலாத்தலங்களில் கலாசார சீர்கேடுகள் ஏற்படல், அதிகம் ஆய்வு பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கான பரிந்துரைகளாக சுற்றுலா தலங்களை முறையான பராமரித்து பாதுகாத்தல்,கலாசார சுற்றுலாக்களை மையப்படுத்தி அபிவிருத்தி திட்டங்கள் கொண்டு வருதல், கலாசார நிகழ்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுலா தளங்களை விருத்தி அடையச் செய்தல், சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலாவுக்கான அனைத்து விதமான வசதிகளை மேம்படுத்தி கொடுத்தல், சுற்றுலாத்தலங்களை விளம்பரப்படுத்தல், கலாசார சுற்றுலாவுடன் தொடர்புபட்ட நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்தல்,போன்ற பரிந்துரைகளும் ஆய்வின் முடிவில் வழங்கப்பட்டுள்ளது.