நுவரெலியா பிரதேச செயலக பிரிவின் வீதி வலைப்பின்னலும் சேவைகளுக்கான அடைவுத்தன்மையும்: ஒரு புவியியல் தகவல் முறைமையிலான (GIS) ஆய்வு

Show simple item record

dc.contributor.author ரஞ்சனிகுமாரி, ராஜேஸ்கன்ணன்
dc.date.accessioned 2024-09-06T07:07:19Z
dc.date.available 2024-09-06T07:07:19Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC 1289 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15680
dc.description.abstract வீதி வலைப்பின்னலின் போக்கானது சேவை மையங்களுக்கான அடைவுத் தன்மையை தீர்மானிக்கின்றது. இதனடிப்படையில் இவ்வாய்வானது நுவரெலியா பிரதேச செயலகத்திற்குப்பட்ட பகுதிகளில் மேற்கொள்கொள்ளப்பட்ட ஆய்வாகும். நுவரெலியா பிரதேச செயலக பிரிவின் வீதி வலைப்பின்னலும் சேவைகளுக்கான அடைவுத் தன்மையையும் அடையாளப்படுத்தல் எனும் நோக்கத்தினை அடையும் பொருட்டு கல்வி, சுகாதாரம், போக்குவரத்து நிர்வாகம், வர்த்தகம், தொலை தொடர்பு, வங்கி மற்றும் காப்புறுதி தளங்கள், வணக்கஸ்தலங்கள், பொழுதுபோக்கு போன்ற சேவை மையங்களை மையமாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் நோக்கத்தினை அடையும் வண்ணம் முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் முக்கியத்துவமானதாக காணப்படுகின்றது. முதலாம் நிலைத் தரவுகளாக வினாக்கொத்து, நேரடி அவதானிப்பு, நேர்காணல் போன்றவற்றினையும், இரண்டாம் நிலைத் தரவுகளாக நகரச்சபை அறிக்கை (2022), வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை (2022). பிரதேச செயலக புள்ளிவிபரக் கையேடுகள் (2022), அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கை (2022), ஆய்வு கட்டுரைகள், நூல்கள், சஞ்சிகைகள் பகுப்பாய்விற்கு உட்படுத்துவதாக காணப்படுகின்றது. பகுப்பாய்விற்காக Google Earth pro w OpenStreet Map Polyline tool மூலமாக பெறப்பட்டு ArcMap 10.7 இல் Network Analysis செய்யப்படுகின்றது. பின்னர் maps me, OpenStreet Map ஆகியவற்றின் மூலமாக point பெறப்பட்டு வீதி வலைப்பின்னலோடு சேவைத்துறை Overlapping செய்யப்பட்டு முடிவுகளை பெறுவதாக காணப்படுகின்றது.வினாக்கொத்தின் முடிவுகள் அடிப்படையில் சேவைகளுக்கான அடைவுத் தன்மை தெளிவுப்படுத்துகின்றது. இதனை மையப்படுத்தி முடிவுகளின் அடிப்படையில் நோக்குமிடத்து பிரதான பாதைகள், மற்றும் உப பாதைகளினை மையமாக கொண்டு சேவை மையங்கள் உருவாக்கப்பட்டதே தவிர மக்களின் நலன்களின் தன்மைப்பாட்டின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதாக காணப்படவில்லை. பிரச்சினைகளுக்கான சிக்கல் தீர்ப்பதற்கான பரிந்துரையாக வீதியமைப்பு தன்மைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தல், உப சேவை மையங்களினை கட்டமைத்தல், கல்வி, சுகாதாரம். போக்குவரத்து நிர்வாகம், வர்த்தகம், தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் காப்புறுதி தளங்கள், வணக்கஸ்தலங்கள், பொழுதுப்போக்கு இடங்கள் போன்றவற்றில் முறையான சாத்தியப்பாட்டினை தனித்தனியாக விரிவுபடுத்துவதாக காணப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject வலைப்பின்னல் en_US
dc.subject அபிவிருத்தி en_US
dc.subject சேவைத்துறை en_US
dc.title நுவரெலியா பிரதேச செயலக பிரிவின் வீதி வலைப்பின்னலும் சேவைகளுக்கான அடைவுத்தன்மையும்: ஒரு புவியியல் தகவல் முறைமையிலான (GIS) ஆய்வு en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account