Abstract:
கைத்தொழில் புரட்சியின் விளைவால் அதிகரித்த நகர வளர்ச்சி ஏற்பட்டது.இதற்கு அமைவாக கட்டமைக்கப்பட்ட பகுதிகளும் விரைவாக வளர தொடங்கின.அதற்கமைவாக நுவரெலியா நகரத்தின் கட்டமைக்கப்பட்ட பகுதிகளில் பாங்குகள் என்னும் தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட பகுதியில் போக்குகளை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வு நுவரெலியா நகரத்தின் கட்டமைக்கப்பட்ட பகுதிகளை அடையாளப்படுத்தல், கட்டமைக்கப்பட்ட பகுதிகளை தீர்மானிக்கும் காரணிகளை இனங்காணல், கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் பாங்கினால் ஏற்படும் பாதக விளைவுகளை சுட்டிக்காட்டல், எதிர்காலத்தில் ஆய்வு பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் போக்கினை ஊகித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு" மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாய்விற்கான நோக்கத்தினை அடைய முதலாம் நிலைத்தரவுகள் நேரடி அவதானம், நேர்காணல் மற்றும் மூலமாக பெறப்பட்டுள்ளதோடு இரண்டாம் நிலைத்தரவுகளான 2013 மற்றும் 2023 கான Google Earth படங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அறிக்கைகள், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு மூலவள திரட்டு (2023), ஆய்வுடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் எதிர்கால போக்கு என்பனவற்றினை புவியியல் தகவல் முறையில் கையாள Google Earth Pro மூலமான 2013 மற்றும் 2023 ஆண்டுக்கான படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. நகரின் கட்டமைக்கப்பட்ட பகுதிகளை தெரிவு செய்து ArcMap 10.4.1 பயன்படுத்தி Digitize செய்யப்பட்டது.Microsoft Excel மென்பொருளை பயன்படுத்தி வரைபுகள், விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் படம் தயாரிப்புக்கான படிமுறைகள் ஆய்வு முறையியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரத்தில் கட்டமைக்கப்பட்ட பகுதிகளான கட்டிடங்கள், வீதிகள்,மைதானங்கள், சுற்றுலாத் தளங்கள் போன்ற பிரதான வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மாற்றங்களுக்கான காரணிகளும் கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளும் கூறப்பட்டுள்ளதோடு 2013, 2023 ஆகிய காலப்பகுதிக்குள் 27.1 சதவீதமாகக் காணப்பட்ட பகுதி 72.8 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு கட்டமைக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சி போக்கு என்பன ஆய்வில் விளக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆய்வின் இறுதியில் ஆய்வின் முடிவுரைகளும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.