dc.description.abstract |
அபிவிருத்தி நிலையினை பாதிக்கும் காரணியாக இடரீதியான வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு இடையிலான அபிவிருத்தி சமமின்மையை ஆராய்வதாக இவ்வாய்வு காணப்படுகின்றது. ஆய்வு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள. அபிவிருத்தியினை இடரீதியாக ஒப்பிட்டு ஆராய்வதுடன் அபிவிருத்தியானது இடரீதியாக எவ்வாறு காணப்படுகின்றது என்பதனையும் அபிவிருத்தியில் இட ரீதியான வேறுபாட்டை தோற்றுவிக்கும் காரணிகள் மற்றும் இடரீதியாக ஏற்படும் வேறுபாடுகளை குறைப்பதற்கான தீர்வுகளை வழங்குவதை நோக்ககாகக் கொண்டு இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வினை மேற்கொள்வதற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றை பண்புசார் மற்றும் அளவுசார் ரீதியில் பகுப்பாய்வு செய்யப்பட்டடுள்ளது. Arc GIS மற்றும் Google Earth ஆகிய மென்பொருட்களை பயன்படுத்தி படமாக்கலும் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக இட ரீதியான வேறுபாடுகள் இனங்காணப்பட்டு, அவ்வாறு இனங்காணப்பட்ட வேறுபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகமற்றும் ஆய்வு பிரதேசத்தில் காணப்படக்கூடிய அபிவிருத்திகள் சார் பலங்கள் பலவீனம் தடைகள் வாய்ப்புகள் என்பவற்றை ஆராய்ந்து அதற்கேற்றாற் போல் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக SWOT பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது பிரதேச அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான நடைமுறைகளையும் இவ் ஆய்வு விளக்குகின்றது. பெறுபேறுகளின் படி ஆய்வு பிரதேச அபிவிருத்தியில் கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், சேவை வசதிகள் போன்ற விடயங்களில் வேறுபாடுகளை இனங்காண முடிகின்றது. கச்சக்கொடிசுவாமிமலை. தாந்தாமலை, பனிச்சையடிமுன்மாரி, மாவடிமுன்மாரி, கற்சேனை ஆகிய பகுதிகள் ஏனைய பகுதிகளை விட அபிவிருத்தி ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைக்கு இப்பகுதியின் அமைவிடம், யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டமை, சேவை வசதிகள் அடைவுத்தன்மை, உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை போன்றன மிக முக்கிய காரணிகளாக அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசங்களை நோக்கி அபிவிருத்திகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். |
en_US |