dc.description.abstract |
இலங்கையில் இறப்பர் உற்பத்திக்கு முக்கியத்துவம் பெற்ற கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள தெரணியகல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறப்பர் பயிர்ச்செய்கை "தெரணியகல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இறப்பர் பயிர்ச்செய்கை: அண்மைக்கால போக்கும் எதிர்நோக்கும் சவால்களும்" எனும் தலைப்பிலான இவ்வாய்வானது தெரணியகல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் இறப்பர் பயிர்ச்செய்கையின் உற்பத்தி போக்கும் எதிர் நோக்கிவரும் சவால்களை கண்டறிதை பிரதான நோக்கமாகவும், ஆய்வு பிரதேசத்தில் இறப்பர் பயிர்ச்செய்கையின் இடரீதியான பரம்பலும் உற்பத்தி போக்கும், ஆய்வு பிரதேசத்தில் இறப்பர் உற்பத்தி போக்கில் ஏற்படும் சவால்கள், அச்சவால்களை தீர்ப்பதற்கான தீர்வாலோசனைகளை முன்வைப்பதனை உபநோக்கங்களாகவும் கொண்டுள்ளது. இந்நோக்கங்களை அடைந்து கொள்ளும் பொருட்டு கலப்புமுறை ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் வினாக்கொத்து, கலந்துரையாடல், நேர்காணல், நேரடி அவதானிப்புமுதலான முதலாம் நிலைத்தரவு சேகரிப்பு முறைகளில் பெறப்பட்ட தரவுகளுடன் ஆண்டறிக்கைகள், கையேடுகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலைத்தரவுகளும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. வினாக்கொத்துக்களில் மூலம் 58 மாதிரி எடுப்புக்களில் தொழிலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஆய்வுக்காக லலான் நிறுவன தரவு மாதிரிகள் மற்றும் அளவு சார். பண்புசார் முறைகளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன் Arc GIS 10.4.1 பயன்படுத்தி இறப்பர் உற்பத்தி மற்றும் நிலஅளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன படமாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரணியகல பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இறப்பர் உற்பத்தியானது தொடர்ச்சியாக வீழ்ச்சிப்போக்கினை அடைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு காணப்பட்ட உற்பத்தியை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது உற்பத்தி போக்கு மற்றும் இடரீதியான வேறுபாடுகள் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்தியுள்னமை கண்டறியப்பட்டுள்ளது. இறப்பர் உற்பத்தி வீழ்ச்சிக்கான காரணங்களில் இறப்பர் பயிர்ச்செய்கை நிலம் குறைவடைதல், தொழிலாளர்களின் வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகரிப்பு, இறப்பர் மரத்திற்கு ஏற்பட்டுள்ள நோய் பீடைகள், பராமரிப்பில் ஏற்படும் சவால்கள் போன்றன பிரதான காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அத்துடன் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதோடு எதிர்காலத்தில் இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆய்வுப்பிரதேசத்தில் இறப்பர் தோட்டத்துறைகளின் உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணமான. சவால்களை குறைப்பதற்கு பொறுப்பான பங்குதாரர்களினால்
முன்வைக்கப்படும் காத்திரமான நடவடிக்கைகள் மூலம் இப்பிரதேச இறப்பர்
துறையை முன்னேற்றி இத்தொழில் துறையை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டினையும் உறுதிசெய்து, இப்பிரதேச இறப்பர் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சியை குறைத்து உற்பத்தியில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். |
en_US |