dc.description.abstract |
ஹட்டன் பிரதேசங்களில் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக திண்மக்கழிவகற்றல் காணப்படுகின்றன. அந்த வகையில் ஹட்டன் டிக்கோயா நகர சபைப் பகுதியில் திண்மக்கழிவகற்றல் தொடர்பான பிரச்சினைகள் எனும் ஆய்வுத் தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு இந் நகர சபைக்குட்பட்ட பகுதியில் திண்மக்கழிவகற்றல் மற்றும் அவை தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கண்டறிதல் எனும் பிரதான நோக்கத்தையும், திண்மக்கழிவுகளின் வகைகளை அடையாளப்படுத்துதல் மற்றும் அவற்றினை அளவைப்படுத்துதல், இவ்வாய்வு பிரதேசத்தின் நகர சபைப் பகுதியின் கழிவகற்றலில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் குறிப்பிட்ட பிரச்சினைக்கான முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியவற்றை துணை நோக்கமாகக் கொண்டு முதலாம் நிலை தரவுகளான வினாக்கொத்து, நேரடி அவதானிப்பு, நேர்காணலும் கலந்துரையாடலும் ஆகியவற்றைக் கொண்டும் இரண்டாம் நிலை தரவுகளான நகர சபை புள்ளிவிபர அறிக்கை 2022, நூல்கள், உத்தியோகப்பூர்வ இணையதளங்கள் លញ់ @ Arc GIS 10.4, Ms Excel, Maps.me, Google Earth Pro की பகுப்பாய்வு நுட்ப முறைகள் போன்றவற்றினைக் கொண்டும் தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தின் திண்மக்கழிவு வகைகளாக உக்கும் கழிவுகள் மற்றும் உக்காதக் கழிவுகள் ஆகியன வகைப்படுத்தப்பட்டும் இவற்றின் அளவை வேறுபாடுகளிற்கிணங்க வீட்டுக் கழிவுகளில் உக்கும் கழிவுகள் மிக அதிகமாக வெளியேற்றப்படுவதாக 27.43 சதவீதத்தினரும் இதற்கடுத்ததாக பொலித்தீன் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக 21.69 சதவீதத்தினரும் குறிப்பிட்டுள்ளனர். இவ் ஆய்வுப் பிரதேசத்தில் கழிவகற்றல் தொடர்பான மக்களுக்கான போதிய இடவசதியின்மை, ஊழியப் பற்றாக்குறை, நகர சபையின் முறையற்ற செயற்பாடுகள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள். போக்குவரத்து சார்ந்த பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள், இறுதிக் கழிவற்றலிற்கான இடப்பற்றாக்குறை ஆகியன முக்கிய திண்மக்கழிவகற்றல் பிரச்சினைகளாகக் காணப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் சார் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைவாக
முறையான இடத்தை நகரசபைக்கு அண்மையில் பெற்றுக்கொடுத்தல், ஊழியர்களின்
எண்ணிக்கையினை அதிகரித்தல், திண்மக்கழிவகற்றலுக்கு பொருத்தமான நவீன
முறையிலான உபகரணங்களை வழங்குதல் மற்றும் தரம் பிரித்து வழங்குவதற்கான
ஊக்குவிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தல் என்பனவாகும். |
en_US |