dc.description.abstract |
கெகிராவ பிரதேச செயலகப்பிரிவுகளில் வாழும் மக்கள் குடிநீர் தொடர்பான பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு இப்பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் காணப்படும் குடிநீரின் தரநிலையினைப் பற்றிய இடரீதியான பகுப்பாய்வு மேற்கொள்ளுதல் எனும் பிரதான நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு நீரின் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களை அடையாளம் காணுதல். அவை மூலம் எழும் தாக்கங்களும் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தல் ஆகிய உபநோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட மாதிரி எடுப்பினூடாக கிணறுகள் உள்ள வீடுகளிற்கு எளிய எழுமாற்று முறை மூலம் வினாக்கொத்து வழங்கப்பட்டதோடு எளிய எழுமாற்று மாதிரி முறையினூடாக 79 நீர் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டது. முக்கிய நீர் தர பரமானங்கலான PH, TDS, EC, கலங்கல் தன்மை, உவர்த்தன்மை, பரிசேதிக்கப்பட்டது. தரவு பகுப்பாய்விற்கான Excel உடன் இணைந்து GIS அடிப்படையிலான இடைக்கணிப்பு நுட்பங்கள், ஆய்வுப் பகுதி முழுவதும் நீரின் தரத்தின் இடஞ்சார்ந்த பரம்பலை காட்சிப்படுத்த பயன்டுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவின் படி ஒலம்பேவ (014) கிணற்றில் 5.9, மஹகெகிராவ (ME3) கிணற்றில் 5.8 அளவில் WHOவினால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட pH அதிகமாக உள்ளது. உவர்தன்மை ஹோராப்பொல கிராமத்தில் 0.3 அளவில் WHOவினால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட அதிகமாக உள்ளது. ஒலம்பேவ, ஹோராப்பொல, நிதிகம, உனகொள்ளாவ, மஹகெகிராவ, மஹஇலகமுவ ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள கிணறுகளில் WHOவினால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட அதிகமாக TDS பெருமானம் காணப்படுகின்றது. EC பெருமானம் ஆய்வுப்பிரதேசத்தில் பெரும்பான்மையான மாதிரிகளில் WHOவினால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட அதிகமாக உள்ளது. இவ்வாறான நீரின் இரசாயன பெளதீக மாற்றங்களிற்கு இயற்கை காரணிகளை விட மானிட காரணிகளே அதிகம் தாக்கம் செலுத்துகின்றமை ஆய்வில் நிரூபனமாகியுள்ளது. நீரின் தரம் தொடர்பான புவிசார் தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், தரைக்கீழ் நீரின் தர நிலைமை தெளிவான வெளிக்காட்டப்பட்டுள்ளது. நீர் வள முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி செயற்பாட்டிற்கு அடிப்படையாக இவ்வாய்வு அமைவதுடன் நெகிழ்ச்சியான மற்றும் நீர் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற்றத்தை
ஊக்குவிக்கிறது. |
en_US |