Abstract:
உலகலாவிய ரீதியில் இன்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயற்கை அனர்த்தங்களானது ஏற்பட்டு வருகின்றன. இலங்கையும் இவ்வாறு அனர்த்த நிலைமையிற்கு உள்ளாகும் நாடாகும். இவ்வாறு இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத பிரதேச செயலகப் பிரிவு ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு உட்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. எலபாத்த பிரதேச செயலகப் பிரிவின் வெள்ள அனர்த்த மதிப்பீடு ஓர் புவியிடத் தொழில்நுட்பப் பகுப்பாய்வு என்ற ஆய்வின் மூலம் இடர் மற்றும் நலிவுறுநிலையினை மதிப்பீடு செய்து வெள்ள அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்புக்களினை இழிவளவாக்குவதற்கான நெறிமுறைகளை முன்வைப்பதாக காணப்படுகின்றது. அளவு சார், பண்பு சார் இணைந்த கலப்பு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கு முதலாம் நிலைத் தரவுகளும் இரண்டாம் நிலை தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அவதானிப்பு, கலந்துரையாடல் மற்றும் முக்கிய நபர்களிடமிருந்து நேர்காணல் மூலம் முதன்மை தரவுகள் பெறப்பட்டன. எலபாத பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்ததுவ பிரிவில் இருந்து கடந்தகால வெள்ள அனர்த்த தரவுகள், வளிமண்டலவியல் திணைக்களத்தில் இருந்து 1992 2022 வரையான மாதாந்த மழைவீழ்ச்சித்தரவுகள் . Earth explor, USGS, Google earth pro, Disaster Management Center என்பவற்றிலிருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பகுப்பாய்விற்காக ArcGIS 10.3.1 மற்றும் MS Excel பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் படத்தினை தயாரிக்க DEM உருவாக்கப்பட்டுள்ளது. மழை வீழ்ச்சி, தரையுயர வேறுபாடு, சாய்வுப்படம், மற்றும் நதிவடி நிலம் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு வெள்ள இடர் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரத்தெல்ல சமன்கம, தம்புளுவன பகுதியில் 6163 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதோடு இவற்றில் 67 வீதமானவர்கள் இடர் நிலையில் காணப்படுகின்றனர். வெள்ள இடர், நிலப்பயன்பாடு மற்றும் சனத்தொகை அடர்த்தி கணிக்கப்பட்டு ஆய்வு பிரதேசத்தின் வெள்ள அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நலிவுறுநிலை இவற்றில் 86 வீதமானவர்கள் வெள்ள நலிவுறுநிலையில் காணப்படுகின்றனர். இங்கு வெள்ள அனர்த்தத்திற்கு மானிட, பௌதீக காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றது. ஆய்வு பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன