Abstract:
இலங்கைக்கு சுற்றுலாத்துறையானது இன்று முக்கியத்துவம் பெற்ற ஒரு துறையாக விளங்குகின்றது. ஏனெனில் அதிகளவான அந்நியச்செலவானியை பெற்றுத்தருகின்ற துறையாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்தும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலங்களிள் ஒன்றான கண்டி மாட்டத்தின் கம்பளை பிரதேசத்தின் எல்லைக்கு உட்பட்ட அம்புலுவாவ மலைப்பகுதியை பார்வையிட அதிகமான மக்கள் வருகைத்தருகினறனர். இதற்கு அமைவாக "கம்பளை அம்புலுவாவ மலைப்பகுதியில் சுற்றுலாவுக்கு வாய்ப்பான இடங்களை அடையாளப்படுத்தலும் அவற்றின் அபிவிருத்தி நிலையை அறிதலும்”எனும் தலைப்பில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. கம்பளை அம்புலுவாவ பகுதியில் சுற்றுலாவிற்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளப்படுத்தலும் அபிவிருத்தி செய்வதற்கான உபாயங்களை முன்வைத்தல் இதன் பிரதான நோக்கமாக உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் முகமாக ஆய்வுப்பிரதேசத்தின் சுற்றுலாதளங்களை அடையாளப்படுத்தல், மற்றும் படமாக்கல் சுற்றுலாத்தலங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளம் காணுதல் சுற்றுலா தலங்களின் குறைநிறைகள் மக்கள் மத்தியில் சுற்றுலாத்துறை தொடர்பில் நிலவும் கருத்துக்கள் என்பன இனங்காணப்பட்டுள்ளன.இவ் ஆய்வு ஐந்து அத்தியாயமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆய்வுப்பிரதேச பௌதிக மற்றும் வரலாற்றுப் பின்னணி, இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியும் ஆய்வுப்பிரதேச வளவாய்ப்பும், ஆய்வுமுறையிலும், ஆய்வுப்பிரதேச அபிவிருத்தி சார் பிரச்சினைகளும் ஆய்வுப்பிரதேச மலைசுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதிக்கான சிபாரிசுகள் மற்றும் ஆலோசனைகள் முக்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றிக்கு முதலாம் நிலைத்தரவுகள்,இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தபட்டதுடன் மலையின் அபிவிருத்தியை அறிய இப்பிரதேசத்திக்கான SWOT பகுப்பாய்வு மேற்கொள்ளபட்டதுடன் தரவுகளை அளவை ரீதியான Excel,ARC_10 ஆகிய மென்பொருட்கள் மூலம் தரவுகள் விளக்கபட்டுள்ளன.கம்பளை அம்புலாவமலைப்பகுதியில் பகுதியில் சுற்றுலாவிக்கு வாய்ப்புள்ள இடங்களான அம்புலுவாவ மலைகோபுரம், குளம்,கலாசாரஇடங்கள்,மலர் தோட்டங்கள் அதிகமாக காணப்படினும் முறையான திட்டமிடல் இன்மையால் மட்டுபடத்தபட்டதாக இருப்பதுடன் இப்பிரதேசத்தின் சுற்றுலா அபிவிருத்திக்கும் தடையாக உள்ளது. இவ்வாறு சுற்றுலாத்துறையானது விருத்தி குறையாக காணப்படும் போது இப்பிரதேசத்திக்கான பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாதாரம் என்பன பாதிப்படைவது தொடர்பாக சுட்டிகாட்டப்பட்டுள்ளதுடன் இவற்றின் விருத்திக்கான
பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.