dc.description.abstract |
இலங்கையில் தேயிலையை உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் உயர்நிலப்பகுதி தேயிலை உற்பத்தியானது முன்னணி வகிக்கின்றது. அந்தவகையில், தேயிலை உற்பத்திக்கு பெரும் பங்கு வகிக்கும் பதுளை மாவட்டத்தினுடைய தேயிலை பெருந்தோட்டதுறையினை மையப்படுத்திய "வெலிமடை பிரதேச செயலக பிரிவின் வார்விக் பெருந்தோட்டத்தினுடைய தேயிலை உற்பத்தியின் போக்கும் மக்களின் வாழ்க்கை தரமும்" எனும் தலைப்பில் ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது, வார்விக் பெருந்தோட்டத்துறையின் தேயிலை உற்பத்தி போக்கு தொடர்பாகவும் தோட்டபுற மக்களினுடைய வாழ்க்கை தரம் தொடர்பாகவும் அறிதலை பிரதான நோக்கமாகவும், உற்பத்தியில் காணப்படும் மாற்றம் தொடர்பில் ஆராய்தல் மற்றும் மக்களின் சமூக பொருளாதார ரீதியான காணப்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வாலோசனைகளை முன்வைத்தலை உபநோக்கங்களாகவும் கொண்டுள்ளது. இந்நோக்கங்களை அடைந்துக் கொள்வதற்காக முதலாம் நிலை தரவுகளாக வினாக்கொத்துகள், கலந்துரையாடல்கள், நேரடி அவதானிப்பு, நேர்காணல்கள் மூலமும் ஆய்வு களத்தில் ஆய்வாளனால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கள ஆய்வின் மூலமாகவும் சேகரிக்கப்பட்ட தரவுகள் காணப்படுகின்றன. இரண்டாம் நிலை தரவுகளாக ஆய்வு பிரதேச ஆண்டறிக்கைகள், கைடுேகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மூலம் அட்டவணையாக்கப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளது. Arc GIS 10.3 பகுப்பாய்வின் மூலம் ஆய்வு பிரதேச தேயிலை உற்பத்தி போக்கு. பரம்பல், தரையுயரம், ஆய்வு பிரதேசம், சாய்வு தன்மை போன்றவை படமாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பியர்சனின் இணைவு குணக பகுப்பாய்வின் அடிப்படையில், உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. தரவு பகுப்பாய்வின் அடிப்படையில் வார்விக் பிரதேசத்தின் தேயிலை உற்பத்தியானது 5 சதவீதமான வீழ்ச்சி நிலையினை சந்தித்து வருகின்றதை கண்டறிந்துள்ளது. மக்களினுடைய வாழ்க்கை தரம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. தேயிலை பயிர்ச்செய்கை நிலமும் இரண்டு மடங்கு குறைவடைந்துள்ளது. வார்விக் தோட்டபுற மக்கள் 10000ற்கும் குறைந்த மாதாந்த வருமானம் ஈட்டும் தன்மை காணப்படுகின்றது. 5 சதவீதமானவர்கள் ஒரு வேளை உணவினையும் 67 சதவீதமானவர்கள் இரண்டு வேளை உணவினையும் 28 சதவீதமானவர்கள் மூன்று வேளை உணவினையும் உட்கொள்வதனையும் ஆய்வினூடாக அறியமுடிந்தது. ஆய்வு பிரதேசத்தின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான விடயங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளதோடு மக்களினுடைய வாழ்க்கை தரத்தினை
மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவையும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |