dc.contributor.author |
கீர்த்தனா, இராஜேந்திரன் |
|
dc.date.accessioned |
2024-09-10T08:31:32Z |
|
dc.date.available |
2024-09-10T08:31:32Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1308 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15699 |
|
dc.description.abstract |
மகாவலி கங்கையின் உப நீரேந்துப் பிரதேசமான கொத்மலை நீரேந்துப் பிரதேசத்தில் அண்மையக் காலப்பகுதியில் மனித தலையீட்டின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது. இப்பிரதேசத்தினை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இவ்வாய்வின் பிரதான நோக்கம் கொத்மலை நீரேந்துப் பிரதேசத்தில் மனித தலையீடுகளும் அவற்றின்
விளைவுகளும்: புவியியல் தகவல் முறைமையினூடான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் உப நோக்கங்களாக கொத்மலை நீரேந்துப் பிரதேசத்தின் கூறுகள் மற்றும் அதன் பண்புகள் பற்றியதாகவும் இரண்டாவது நோக்கம் மனித தலையீடு பற்றியும் அதனால் அப்பகுதி எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அமைகின்றது. இவ்வாய்விற்கு அளவை ரீதியிலான மற்றும் பண்பு ரீதியிலான பகுப்பாய்வு முறைகள் இவ்வாய்விற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கு USGS. ArcGIS, Excel மென்பொருட்களை பயன்படுத்தி படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு தொகைமதிப்பு திணைக்கள தரவுகள், வளிமண்டல திணைக்கள தரவு மற்றும் விவசாயத்திணைக்கள தரவுகள் ஊடாக பெறப்பட்டு படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவின் படி மனிதனின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக நீரேந்து பிரதேசம் அச்சுறுத்தலான பகுதியாக மாறி வருகின்றது எனவும் அதிக குடியிருப்புகளும் விவசாய செயற்பாடுகளும் வெகுவாக இப்பகுதியினை மாற்றி வருகின்றன. சனத்தொகை அதிகரிப்பானது 1981ம் ஆண்டு 281.0 ஆக காணப்பட்ட நிலைமை 2023ம் ஆண்டுக்காலப்பகுதியில் 469.2 வீதமாக அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் கட்டியமைக்கப்பட்ட பகுதிகள் 2013ம் ஆண்டு 11.2 சதவீதமாக காணப்பட்ட நிலைமை 2022 ம் ஆண்டு 13.59 ஆக அதிகரித்துள்ளது. அவ்வாறே விவசாயச் பயிர்ச்செய்கையானது 23.4 வீதமாக காணப்பட்ட நிலைமை 28.56 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறான காரணங்களினால் இப்பகுதியும் சூழல் தொகுதியும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதோடு நீரின் தரத்தில் மாற்றம் அடைவதோடு மண்ணின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. ஒரு மூல மற்றும் பல் மூல மாசாக்கிகளின் காரணமாக நீரின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகின்றது. கொத்மலை நீரேந்துப் பிரதேசத்தில் பெரும்பாலும் விவசாயச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள நீர் மூலங்களே வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிலமேற்பரப்பு வெப்பநிலையிலும் வெப்பம் அதிகரித்து வருகின்றது. எனவே நீரேந்து பிரதேசத்தினை பாதுகாப்பதற்காக முகாமைத்துவ செயல்பாடுகளும் சூழல் தொகுதியையும் நீர் மூலத்தை மீட்டெடுப்பதற்கும் ஏற்றவகையில் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
நீரேந்துப் பிரதேசம் |
en_US |
dc.subject |
வடிகால் பாங்கு |
en_US |
dc.subject |
நீர் மூலங்கள் |
en_US |
dc.subject |
மனித தலையீடு |
en_US |
dc.subject |
விளைவுகள் |
en_US |
dc.subject |
புவியியல் தகவல் ஒழுங்கு |
en_US |
dc.title |
கொத்மலை நீரேந்துப் பிரதேசத்தில் மனித தலையீடுகளும் அவற்றின் விளைவுகளும்: புவியியல் தகவல் முறைமையினூடான பகுப்பாய்வு |
en_US |
dc.type |
Thesis |
en_US |