Abstract:
நுவரெலியா மாநகரசபை பிரதேசத்தினுடைய திண்மக் கழிவு முகாமைத்துவம் என்ற தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளபட்டது. கழிவுகளானது பெரும்பாலும் சூழலுக்கு வெளியேற்றப்படுவது மானிட காரணிகளின் காரணமாகும். இவ் ஆய்வின் உண்மை நிலையைக் கண்டறிய நுவரெலியா மாநகரசபை பகுதிக்குட்பட்ட குடியிருப்புக்களை கொண்டு 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இவ்வாய்வானது ஐந்து அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வினுடைய பிரதான நோக்கமாக நுவரெலியா மாநகரசபை பிரதேசத்தில் காணப்படுகின்ற திண்மக்கழிவுகளால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கான முகாமைத்துவ வழிமுறைகளை முன்வைப்பதாக காணப்படுகின்றது. மற்றும் துணை நோக்கங்களாக ஆய்வுப் பிரதேச கழிவுகளை இணங்காணல் மற்றும் கழிவுகளால் ஏற்படுகின்ற விளைவுகளை கண்டறிதலாகும். மேலும் நுவரெலியா மாநகரசபையினர் மேற்கொள்கின்ற முகாமைத்துவ நடவடிக்கைகளையும் முன்வைப்பதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது. இவ் ஆய்வுக்குத் தேவையான தரவுகள் யாவும் நுவரெலியா மாநகரசபை பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுமக்கள், சுற்றுளாத் தளங்களில் பணிபுரிவோர், வர்ததகர்கள், மாநகரசபை சுகாதார உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபையினர். போன்றோரிடமிருந்து முதலாம் நிலைத் தரவுகளான வினாகொத்துக்கள் நேரடி கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு மூலமும் பெறப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகளான சனத்தொகைத் தரவு, மாநகரசபைத் தரவு. மற்றும் ஏனைய புள்ளிவிபரத் தரவுகளும் தரவு பகுப்பாய்விற்காக பெறப்பட்டன. இத் தரவுகள் யாவும் அளவை மற்றும் பண்பு ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வின் பெறுபேற்றின் படி ஆய்வுப் பிரதேசத்தில் கழிவுகள் அதிகமாக காணப்படுவது கண்டறியப்பட்டதுடன் கழிவுகளை அதிகமாக வெளியேற்றுவது சுற்றுளாத் தளங்கள்,வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புக்கள் என்பனவும் கண்டறியப்பட்டன. இக் கழிவுகளின் அதிகரித்த வெளியேற்றம் காரணமாக பெரும்பாலானோர் டெங்கு மற்றும் ஏனைய பல நோய் நிலமைக்கும் உட்பட்டுள்ளதுடன் பல அசௌகரிய நிலைமைக்கும் பொதுமக்கள் உட்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. மாநகரசபையினர் எவ்வாறான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கூட அது முழுதாக நடைமுறைப்படுத்தப்படாத விடயமாகவே காணப்படுகின்றது. எனவே இதற்காக மாநகரசபையினர் சட்டங்களை நடைமுறைப்படுத்தல் .மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மாநகரசபையினர் முழுமையாக கழிவகற்றலில் ஈடுபடல் போன்ற நடைமுறைகளை ஒரு
மேற்கொள்ளல் போன்ற பரிந்துரைகளும் இதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன.