dc.description.abstract |
வினைத்திறனான விஞ்ஞானப்பாடக் கற்றல் செயன்முறைகளில் முக்கியம் வாய்ந்ததாக ஆய்வுகூடப் பயன்பாடு காணப்படுகின்றது. அதனடிப்படையில் பாடசாலைகளில் விஞ்ஞானப்பாட வினைத்திறனான கற்றலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளைக் கண்டறிந்து அதில் ஆய்வுகூடத்தைப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சினைகளை இனங்காண்பதை நோக்காகக் கொண்டு இவ் ஆய்வு இடம்பெற்றுள்ளது. இவ் ஆய்வுக்காக மண்முனை தென்எருவில் பற்றுக்கோட்டப் பாடசாலைகளிலுள்ள தரம் 11 மாணவர்களை மையப்படுத்தியதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது. மண்முனை தென்எருவில் பற்றுக் கோட்டமானது 37 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இதில் விஞ்ஞான ஆய்வுகூடம் உள்ள 11 பாடசாலைகள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நோக்கமாதிரியின் தெரிவினூடாக 11 அதிபர்களும், தரம் 11 இற்கு விஞ்ஞானப்பாடம் கற்பிக்கும் 31 ஆசிரியர்களும், தரம் 11 இல் கல்வி கற்கும் 809 மாணவர்களில் ஆண்,பெண் என படையாக்கம் செய்யப்பட்டு அதிலிருந்து 10:1 எனும் விகிதாசார அடிப்படையில் 81 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடம் வினாக்கொத்து, நேர்காணல் படிவம் என்பன பயன்படுத்தப்பட்டு தரவுகள் பெறப்பட்டு பண்புரீதியாகவும். அளவு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Microsoft excel இன் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும். விஞ்ஞானப்பாடத்தில் மேலதிக வகுப்புக்கள் பாடசாலைகளில் நடாத்தப்படுகின்றது எனவும். பாடசாலைகளில் விஞ்ஞானப்பாடம் சம்பந்தமான கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்றது எனவும், ஆய்விற்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில் பெற்றோருடன் விஞ்ஞானப்பாட அடைவு மட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் ஆய்வுகூடத்தில் செயன்முறை ரீதியான பயிற்சியினை மேற்கொள்வதற்கு போதியளவு வளங்கள் இன்மை எனவும், இரசாயன பதார்த்தங்களை, கண்ணாடி உபகரணங்களை கையாள்வது பற்றிய பூரணமான விளக்கம் ஆசிரியரால் வழங்கப்படாமை எனவும், விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பாதுகாப்புக்குரிய கையுறை, கண்கவசம், மூக்குகவசம் போன்ற அணிகலன்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்படாமை எனவும், ஆய்விற்குடுத்தப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் விஞ்ஞானப்பாடத்தை செய்முறை ரீதியாக ஆய்வுகூடத்தில் குறைவாகவே கற்பிக்கின்றனர் எனவும் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் செய்முறையினை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாமை போன்ற முடிவுகள் பெறப்பட்டு அவற்றுக்குரிய விதப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. மாணவரது விஞ்ஞானப்பாட அடைவு மட்டத்தை விருத்தி செய்ய வேண்டும் எனில் பாடசாலையில் ஆய்வுகூடத்திற்குத் தேவையான அனைத்து வளங்களும்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். |
en_US |