Abstract:
தற்காலத்தில் மாணவர்கள் அறிவுசார் ரீதியாக முன்னேறிச் சென்றாலும் ஆளுமைசார் பண்பு ரீதியாக பின்நோக்கிச் செல்வதைக் காணமுடிகின்றது. இதனை மாற்றியமைக்கும் முகமாகவே பாடசாலையின் மத்தியில் இணைக்கலைத்திட்டங்கள் முறைசாரா கலைத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாடசாலை ஒன்றின் பரந்த கலைத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் பாடவிதான மேலதிக செயற்பாடுகளுக்குப் கலைத்திட்டச் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளாகும். மாணவனிடம் புறம்பானதாக செயற்பாடுகளே பூரண விருத்தியை ஏற்படுத்துவதில் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் பெரும் பங்கை வகிக்கின்றன எனலாம். இருப்பினும் இதன் முக்கியத்துவம் பாடசாலை மட்டத்தில் அறியப்படாத நிலை காணப்படுகின்றது. இதற்கமைய பாடசாலைகளில் இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளினை முன்னெடுப்பதில் தடையாகவுள்ள காரணிகளை இனங்கண்டு அதனை இழிவளவாக்குவதற்கான வழிமுறைகள், ஆலோசனைகளை முன்வைப்பதன் ஊடாக மாணவர்களது ஆளுமையை விருத்தி செய்தலே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக தம்பலகாமம் கல்விக் கோட்டத்திலிருந்து கனிஷ்ட இடைநிலைப் பிரிவினைக் கொண்ட 05 பாடசாலைகள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கனிஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்கள் 103 பேர் 4:1 விகிதத்தில் ஆண்,பெண் எனப் படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரியடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 05 அதிபர்களும் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள் 2:1 விகிதத்தில் படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரியடிப்படையில் 42 பேர் தெரிவு செய்யப்படுகின்றனர். மற்றும் மாதிரியாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் 4:1 விகிதத்தில் படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 26 பேர் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் மூலம் அளவு பண்பு ரீதியான தரவுகள் பெறப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Microsoft Excel இன் ஊடாகப் பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன்
இப்பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன