Abstract:
பாடசாலைக் கலைத்திட்டத்தில் மாணவர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடங்களில் சுகாதாரமும் உடற்கல்வியும் எனும் பாடமும் ஒன்றாகும். இதில் மாணவர்களின் உடல் சுகாதார மேம்பாட்டிற்கான பல அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன இருப்பினும் இதனைப் பின்பற்றி மாணவர்கள் தமது சுகாதார மேம்பாட்டினை பேணுகின்றனரா என்பது சந்தேகத்திற்குரியது எனவே இதனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எவ்வாறு காணப்படுகின்றது. என்பதனை கண்டறியும் நோக்கில் "சிரேஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் உடல் சுகாதார மேம்பாட்டில் சுகாதாரமமும் உடற்கல்வியும் பாடம் ஏற்படுத்தும் தாக்கம்"இவ் ஆய்வு இடம்பெற்றுள்ளது இதற்காக பட்டிருப்பு கல்வி வலயத்தில் போரதீவுப்பற்று கோட்டத்திலுள்ள 20 பாடசாலைகளில் இருந்து 50 சதவீத அடிப்படையில் பத்து பாடசாலைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன மாதிரிகளாக பத்து பாடசாலைகளின் அதிபர்களும் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களில் 10 பேர் நோக்க மாதிரியின் அடிப்படையிலும் தரம் 10, 11 இல் சுகாதார உடற்கல்வி பாடத்தினைக் கற்கும் 356 மாணவர்களிலிருந்து ஆண், பெண் என படையாக்கம் செய்து அவர்களிலிருந்து 4:1 என்ற அடிப்படையில் 89 மாணவர்களும் இலகு எழுமாற்று மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இம் மாதிரிகளிடமிருந்து நோக்கங்களைக் அடையும் வகையிலும் ஆய்வு வினாக்களுக்கு விடைக்களை பெறும் வகையிலும் வினாக்கொத்து நேர்காணல் போன்ற ஆய்வு கருவிகளாக பயன்படுத்தப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. தரவுகள் அனைத்தும் Microsoft Excel ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள் வரைபுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. முடிவுகளாக கட்டிளமைப் பருவ மாணவர்கள் தமது உடல் சுகாதாரத்தினை பேணிக் கொள்வது ஒப்பீட்டளவில் திருப்தியின்மையாக காணப்படுகின்றது. அத்தோடு பாடசாலையில் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்தினால் அடையப்பட எதிர்பார்க்கப்பட்ட விடயங்களில் முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. சுகாதார உள்ளடக்கத்தில் காணப்படும் குறைபாடுகள்.வீட்டுச்சூழலின் தாக்கம், மாணவரின் விருப்பமின்மை என்பன காரணமாக உள்ளது. இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக பாடசாலை மட்டத்தில் மேலதிக வேலைத்திட்டங்களை செயற்படுத்தல், சுகாதார LIITL ஆசிரியர்களின்
வாண்மைத்துவத்தினை விருத்தி செய்தல், மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான
விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற விதப்புரைகள் முன்வைக்கப்பட்டன.