Abstract:
STEM கல்வித் திட்டத்தின் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது
இன்றையை கல்வித் தேவைகளுள் ஒன்றாக காணப்பட்ட போதிலும், இக்கல்வித்
திட்டத்தின் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல சவால்கள்
காணப்படுகின்றன. அந்த வகையில் நவீன கல்வித் திட்டமான STEM கல்வித்
திட்டத்தினை க.பொ.த உயர் தரத்தில் நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்களை
கண்டறியும் நோக்கில் இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. ஆய்வுப் பிரதேசமாக
கல்குடா கல்வி வலயம் தெரிவு செய்யப்பட்டது, இவ்வலயத்தில் உள்ள 84
பாடசாலைகளில் இருந்து நோக்க மாதிரியின் அடிப்படையில் STEM கல்வித் திட்டம்
நடைமுறையில் உள்ள 07 1AB பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. மாதிரிகளாக
அப்பாடசாலைகளின் அதிபர்கள் 07 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன், ஆசிரியர்கள்
நோக்க மாதிரியின் அடிப்படையில் உயர் தரத்தில் STEM கல்வித் திட்டத்தின் கீழ்
உள்வாங்கப்பட்ட பாடங்களை கற்பிக்கும் 65 ஆசிரியர்களில் இருந்து 40 சதவீதத்தின்
அடிப்படையில் 26 ஆசிரியர்களும், மாணவர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில்
தெரிவு செய்யப்பட்டு பாடத்துறைகளின் அடிப்படையில் படையாக்கம்
செய்யப்பட்டதுடன் மேலும் பால் நிலையின் அடிப்படையிலும் ஆண், பெண் என
படையாக்கம் செய்யப்பட்டு மொத்த மாணவர்களில் இருந்து 20 சதவீதத்தின்
அடிப்படையில் 138 மாணவர்களும் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
மாதிரிகளிடமிருந்து தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வினாக் கொத்து.
நேர்காணல் ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அளவு
ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
பகுப்பாய்வானது Microsoft Excel mu பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு
அட்டவணைகள், வரைபுகளின் மூலம் வகை குறித்துக் காட்டப்பட்டு, கலந்துரையாடல்
செய்யப்பட்டது. இவ்வாய்வின் முடிவுகளின் அடிப்படையில் அதிபர், ஆசிரியர் மற்றும்
மாணவர்கள் ஆகியோருக்கு STEM கல்வித் திட்டம் தொடர்பான போதியளவு
விளக்கமின்மை, நவீன கல்வி உலகின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில்
STEM கல்வித் திட்டம் காணப்படுகின்றது. STEM கல்வித் திட்டத்தினை
நடைமுறைப்படுத்துவதில், STEM கல்வித் திட்டம் தொடர்பான போதியளவு
விளக்கமின்மை, குறித்த திட்டத்தின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள்
இன்மை மற்றும் STEM கல்வித் திட்டத்தினை தெரிவு செய்யும் மாணவர்களின்
எண்ணிக்கை குறைவு போன்ற பல சவால்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டு.
STEM கல்வித் திட்டத்தினை வெற்றிகரமான முறையின் முன்னெடுத்துச்
செல்வதற்கான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.