dc.description.abstract |
திறமை கொண்ட க.பொ.த சாதாரண தர மாணவர்களை உருவாக்கம் செய்வதில் ஆங்கிலப் பாடக் கற்றல் முக்கிய பங்கினை வகிக்கின்றது. “க.பொ.த சாதாரண தர மாணவர்களின் ஆங்கிலப் பாடக் கற்றலில் பொதுக்கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் செல்வாக்கு" எனும் தலைப்பின் கீழமைந்த இவ் அளவைநிலை ஆய்வானது க.பொ.த சாதாரண தர மாணவர்களின் ஆங்கிலப் பாடக் கற்றலை அதிகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்படக்கூடிய பொதுக்கல்வி நவீனமயமாக்கல் நிகழ்ச்சி திட்ட செயற பாடுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை கண்டறிதல் எனும் பொது நோக்கத்திற்கேற்ப ஆய்வு மேற கொள்ளப்பட்டது. இதற்காக வலப்பனைக் கல்வி வலயத்தின் கோட்டம் மூன்று க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை உள்ளடக்கிய தமிழ் மொழிமூல பாடசாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் படி நோக்க மாதிரி அடிப்படையில் 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் IAB பாடசாலை ஒன்றும், 1C பாடசாலை மூன்றும் ஆறு வகை II பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன. நோக்க மாதிரி அடிப்படையில் 10 அதிபர்களும், நோக்க மாதிரி அடிப்படையில் 16 ஆங்கிலப் பாட ஆசிரியர்களும், படையாக்கப்பட்ட மாதிரியில் 4:1 என்ற விகிதத்தில் 158 மாணவர்களும், மாதிரியாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் 4:1 என்ற விகிதத்தில் 40 பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து தரவுகளை பெற்றுக் கொள்வதற்காக வினாக்கொத்து, நேர்காணல் போன்ற ஆய்வு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தரவுகள், தகவல்கள் பெறப்பட்டு இவை பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் Microsoft Excel படிமுறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும், கலந்துரையாடலும் இடமபெற்றுள்ளது. தரவு பகுப்பாய்வு முறை மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளாக பொ.க.ந.தி மூலம் குறைவான செயலமர்வுகள், வளப்பற்றாக்குறை, குறைவான பயிற்சிகள், நேரம் போதாமை, வழிகாட்டல்கள், ஆலோசனைகள் குறைவு, மாணவர்கள் ஆர்வமின்மை, போன்ற பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டதோடு க.பொ.த சாதாரண தர மாணவர்களின் ஆங்கிலப் பாடக் கற்றலில் பொதுக்கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் செல்வாக்கு குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், காலத்திற்கு ஏற்ப ஆங்கிலப் பாடக் கற்றலை கூட்டும் விதமாக பாடசாலைகளில்
முழுதாக பொதுக்கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தினை நடைமுறைப்படுத்த
வேண்டும்
என்பதையும் விதப்புரைகள் மூலம்
இவ்வாய்வில்
முன்வைக்கப்பட்டுள்ளது. |
en_US |