dc.description.abstract |
அனைவருக்கும் கல்வி, கல்வியில் FLD வாய்ப்பு, சம சந்தர்ப்பம் என்ற கொள்கைகளுக்கு அமைய அனைவரும் தரமான கல்வியினை சமமாக பெற வேண்டும். இதற்கமைய அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் உள்ள அதிபர்கள் முகாமையாளர் என்ற ரீதியில் பாடசாலையில் சிறப்பான முகாமைத்துவ திட்டங்களை முன்னெடுத்து அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளை விளைதிறன் பாடசாலையாக மாற்றுவதற்கு முன் நிற்க வேண்டும். எனினும் இவற்றை முன்னெடுப்பதில் அதிபர்கள் பல சவால்களை எதிர் நோக்குகின்றனர். எனவே இவற்றினை கண்டறியும் நோக்கில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கல்குடா கல்வி வலயத்தில் கோறளைப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் இலகு எழுமாற்று முறையில் 07 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இப் பாடசாலையின் 07 அதிபர்களும் 65 ஆசிரியர்களும் நோக்க மாதிரியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு தரம் 6-9ம் வகுப்பு மாணவர்களை வகுப்பு அடிப்படையாக படையாக்கம் செய்து 3:1 என்ற விகிதத்தில் இலகு எழுமாற்று முறையில் 121 மாணவர்களும் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டதோடு மாதிரியாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் 2:1 என்ற விகிதத்தில் இலகு எழுமாற்று முறையில் 60 பெற்றோர்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து தரவுகளைப் பெறுவதற்காக வினாக்கொத்து, நேர்காணல், குவியக் குழு கலந்துரையாடல், ஆவணச்சான்றுகள் போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட அளவு சார் தரவுகளும் நேர்காணல், குவியக்குழு கலந்துரையாடல் மூலம் பெறப்பட்ட பண்பு சார் தரவுகளும் Microsoft Excel மூலம் பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இப்பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் புவியியல் அமைவிடம், திருப்தியற்ற போக்குவரத்து வசதிகள், அர்ப்பணிப்பற்ற ஆசிரியர்கள், பெற்றோரின் குறைந்த பங்குபற்றல்கள், கல்வி திணைக்களங்களின் வழிகாட்டல்கள் போதாமை, குறைவான நிதி மற்றும் தொழிநுட்ப வளங்கள் போன்ற சவால்களை அதிபர்கள் எதிர்கொள்கின்றனர். சிறந்த முகாமைத்துவ திறனை வளர்த்தல், போக்குவரத்து வசதிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தல், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கல், ஆசிரியர் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஊக்குவிப்பு வழங்கல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளின் விளைதிறனில் தாக்கம் செலுத்தும் காரணிகளை குறைத்து பாடசாலைகளில்
முகாமைத்துவ திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ளக்கூடிய வகையில்
விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |