dc.description.abstract |
க.பொ.த உயர்தரப் புவியியல் பாடத்தில் செயன்முறைப் புவியியல் முக்கியமான பாடமாக உள்ளதுடன் அதில் கற்பித்தல் துணைச்சாதனங்களைப் பயன்படுத்தி கற்பிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இருப்பினும் ஆசிரியர்கள் பொருத்தமான கற்பித்தல் துணைச்சாதனங்களைப் பயன்படுத்தி கற்பிப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றை இனங்காண்பதை நோக்கமாகக் கொண்டு செயன்முறைப் புவியியலில் கற்பித்தல் துணைச்சாதனங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புவதாகவும் இவ் ஆய்வு அமைந்துள்ளது. இதற்காக கல்குடா கல்வி வலயத்தில் கோறளைப்பற்றுக் கல்வி கோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உயர்தரத்தில் புவியியல் பாடத்தினைக் கொண்ட 03 1AB பாடசாலைகளும் 05 1C பாடசாலைகளும் என மொத்தமாக 08 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு புவியியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நோக்க மாதிரி அடிப்படையில் 30 பேரையும் க.பொ.த உயர்தர புவியியல் பாடம் கற்கும் தரம் 12 மற்றும் 13 மாணவர்கள் 222 மாணவர்களுள் இருந்து ஆண், பெண் எனப் படையாக்கப்பட்டு அதிலிருந்து இருந்து 40% எனும் ஒதுக்கீட்டு மாதிரி அடிப்படையில் 35 ஆண் மாணவர்களும் 55 பெண் மாணவர்களும் என மொத்தமாக 90 மாணவர்களும் 08 அதிபர்களும் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் ஆய்விற்கு தேவையான வினாக்கள் தயாரிக்கப்பட்டு வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலமாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தரவுகள் யாவும் சிறப்பு நோக்கங்களுக்கு அமைவாக மாதிரிகளிடம் இருந்து பெறப்பட்ட அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகள் Microsoft Excel மூலம் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக முடிவுகளும் பெறப்பட்டன. இவ் ஆய்வு முடிவிலிருந்து ஆசிரியர்கள் செயன்முறைப் புவியியல் தொடர்பான கற்பித்தல் துணைச்சாதனங்களைக் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும் சவால்களாக கற்பித்தல் துணைச்சாதனங்கள் குறைவாகக் காணப்படுகின்றமை, குறித்த பாடத்திற்கு என நியமனம் பெற்ற ஆசிரியர்கள் குறைவாக உள்ளமை, நவீன தொழில்நுட்பம் சார் விடயங்களைப் பற்றி அறிவதற்கான பயிற்சிகள் குறைவாக உள்ளமை, GIS,GPS,RS போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் கற்பித்தல் துணைச்சாதனங்கள் பற்றிய தெளிவின்மை என்பன கண்டறியப்பட்டன. இதன்படி இச்சவால்களைக் குறைத்துக் கொள்ளக் கூடிய வகையில் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |