dc.description.abstract |
சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் இன்றைய பாடசாலைச் சூழலில் மிகவும் இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்றது. எனவே இதனைத் திறம்பட மேற்கொள்ள வேண்டிய தேவை பாடசாலைகளுக்குக் காணப்படுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. எனவே இவற்றை கண்டறியும் நோக்கில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்ப்பற்று II பாடசாலைகளுள் 8 பாடசாலைகளும் 8 அதிபர்கள், 60 ஆசிரியர்கள், மற்றும் 30 பெற்றோர்கள் நோக்க மாதிரியடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு 160 மாணவர்கள் ஆண், பெண் என்று படையாக்கம் செய்யப்பட்ட பின்னர் Slovin மாதிரித் தெரிவின் அடிப்படையில் 114 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம் மாணவர்களுள் ஆண் 57 பேரும், பெண் 57 பேருமாக காணப்படுகின்றனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம். ஆவணச்சான்றுகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட அளவுசார் தரவுகளும் நேர்காணல் ஊடாக பெறப்பட்ட பண்புசார் தரவுகளும் Microsoft Excel மூலம் பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் இப் பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகளும், விதப்புரைகளும் கண்டறியப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பங்குபற்றுகின்ற தன்மை மிகக் குறைவாக காணப்படல், மாணவர்களுடைய பாதுகாப்புத் தேவைகள் பூரத்தி செய்யப்படாத நிலைமை காணப்படல், சிறுவர் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கிடைக்காமை போன்ற முடிவுகளும் பாடசாலையின் இணைப்பாட விதானச் செயற்பாடுகள், கற்றல் விருத்திச் செயற்பாடுகள் தொடர்பான திட்டங்களை வகுக்கும் போது பாடசாலை சிறுவர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களையும் அதிபர்கள் வருட ஆரம்பத்திலேயே திட்டமிடல், ஆசிரியர்கள் மாணவர்களினுடைய வீட்டுச் சூழலினை கருத்திற் கொண்டு பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் வளப்படுத்தப்படல், வளவாளர்களைக் கொண்டு மாணவர்களை வளப்படுத்தல், உரிய முறையில் மேற்பார்வையினை மேற்கொள்ளல் மற்றும் மாணவர்கள் அனைவரையும் பாடசாலைக்குள் ஒன்றுபடுத்தி அவர்களை தமது ஆளுகைக்குள் வைக்கத்தக்க வகையிலான செயற்பாடுகளை சிறுவர் பாதுகாப்புக் குழு முன்னெடுத்து செல்லும் போது மாணவர்களுடைய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் காரணிகளைத் தடுத்து அவர்களது பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |