dc.description.abstract |
சிறந்த கற்றலைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களிடம் சிறந்த உடல், உள, சமூக ஆரோக்கியம் காணப்பட வேண்டும். அவ்வாறான மாணவர்கள் ஊடாக சிறந்த அடைவுமட்டங்களை விளைவிப்பவர்களாகத் திகழ்வர். எனவே மாணவர்களின் போசாக்கு நிலைமை பேணப்படுவது மிக அவசியமான ஒன்றாகும். இதனடிப்படையில் போசாக்கு நிலைமை ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் அடைவு மட்டத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதைக் கண்டறிவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. இதற்காக பன்வில கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வசதி மாதிரித்தெரிவின் மூலம் 08 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்ட அதில் உள்ள 08 அதிபர்களும், 08 பாடசாலையில் உள்ள 40 ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களையும் நோக்க மாதிரி அடிப்படையிலும், 902 பெற்றோர்களில் 10 சதவீதம் என்ற அடிப்படையில் ஒதுக்கீட்டு மாதிரியின் மூலம் 93 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். வினாக்கொத்து மற்றும் நேர்காணல், அவதானம் என்பவற்றின் மூலமாக சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் சிறப்பு நோக்கங்களுக்கு அமைவாக மாதிரிகளிடமிருந்து பெறப்பட்ட அளவு மற்றும் பண்புரீதியான தகவல்கள் Microsoft Excel மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வியாக்கியானம் கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவுகளானது மலையகப் பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் போசாக்கானது பின்தங்கிய நிலையில் காணப்படுபடுவதாக கண்டறியப்பட்டடுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிப்படைவதோடு அவர்களின் கற்றல் அடைவின் வீழ்ச்சிக்கு தாக்கம் செலுத்துவதாக அமைகின்றது. எனவே மாணவர்களின் போசாக்கு நிலையை அதிகரிப்பதற்கான பல்வேறுப்பட்ட விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |