dc.description.abstract |
1990 ஆம் ஆண்டுக் கலைத்திட்ட மறுசீரமைப்பினூடாக அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தேசிய மொழியானது தமிழ் மொழி மூல மாணவர்களுக்குச் சிங்கள மொழியும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியும் இரண்டாம் மொழியாகக் கற்க இடமளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இரண்டாம் தேசிய மொழியொன்றைத் தரம் 6 முதல் 9 வரையும் கற்பித்தல் 1999 ஆம் ஆண்டிற் தொடங்கியது. இருப்பினும் இரண்டாம் மொழியாகத் தமிழ், சிங்களப் பாடத்தினைக் கற்றுக் கொள்வதில் மாணவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இச் சவால்களை இனங்கண்டு அவற்றினைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இதன்படி இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக சிலாப வலயத்தின் சிலாபக் கோட்டத்தில் உள்ள 5 தமிழ் மொழி மூல பாடசாலைகள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும், வசதி மாதிரியின் அடிப்படையில் 5 சிங்கள மொழி மூலப் பாடசாலைகளும் உள்ளடங்களாக பத்துப் பாடசாலைகளும், நோக்க மாதிரியின் அடிப்படையில் 10 அதிபர்களும், இரண்டாம் மொழிப் பாடம் கற்பிக்கும் 26 ஆசிரியர்களும், கனிஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்கள் ஆண், பெண் என படையாக்கம் செய்யப்பட்டு 10:1 என்ற விகிதத்தில் இலகு எழுமாற்று மாதிரியெடுப்பு மூலம் 220 மாணவர்களும், தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் ஆய்விற்காகத் தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் படிவம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் Excel மூலமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவை அட்டவணைகள், வரைபுகள் மூலமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் இரண்டாம் மொழி தொடர்பான முன்னறிவின்மை, இரண்டாம் மொழியைப் பேசுவதிலும் விளங்கிக் கொள்வதிலும் சிரமம், இரண்டாம் மொழி எழுத்துக்களைச் சரியாக இனங்கண்டு எழுதுதல் மற்றும் வாசிப்பதில் சிரமம், இரண்டாம் மொழிப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்களிப்பதில் தயக்கம் போன்ற பிரச்சினைகளை கனிஷ்ட இடைநிலை மாணவர்கள் எதிர்கொள்வதாக ஆய்வாளர் கண்டுள்ளதுடன் அதற்கான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |