dc.description.abstract |
பாடசாலை விளைதிறன் மற்றும் ஆசிரியர் விளைதிறன் இடையே ஒரு வலுவான உறவு இருப்பதாக பரிந்துரைக்கப்படுகிறது. கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலையின் விளைதிறன் மேம்பாட்டில் ஆசிரியர்களின் பால்நிலை ரீதியான பங்களிப்பு முதன்மை மற்றும் மையப் பிரச்சினையாக காணப்படுகின்றது. இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக பாடசாலைகளின் விளைதிறனை அதிகரிப்பதில் பெண் ஆசிரியர்கள் பங்களிப்பு செய்வதை பாதிக்கும் காரணிகளை இணங்காணும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இதற்காக கொத்மலை கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் உள்ள 10 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண், பெண் என படையாக்கப்பட்டு 50 சதவீதமானவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலமாகவும் சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் பாடசாலைகளின் விளைதிறனை அதிகரிப்பதில் பெண் ஆசிரியர்களின் பங்களிப்பின் தற்போதைய நிலையினை இனங்கண்டு, பெண் ஆசிரியர்களின் பங்களிப்பின் அவசியத்தை கண்டறிந்து, பெண் ஆசிரியர்கள் பங்களிப்பு செய்வதை பாதிக்கும் காரணிகளை இணங்கண்டு, பெண் ஆசிரியர்களின் பங்களிப்பினை ஊக்கப்படுத்தும் உபாயங்களை முன்வைத்தலுடன் மாதிரிகளிடம் இருந்து பெறப்பட்ட அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகள் Microsoft Excel மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இறுதியாக முடிவுகளும் இவ்வாய்வின் முடிவுகளிலிருந்து பாடசாலைகளின் விளைதிறனை அதிகரிப்பதில் பெண் ஆசிரியர்களின் பங்களிப்பு பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது எனவும், பெண் ஆசிரியர்கள் பங்களிப்பு செய்வதில் குடும்பம், பாடசாலை மற்றும் தனிப்பட்ட காரணிகள் பாதிப்பினை செலுத்துகின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாடசாலைகளின் விளைதிறன் அதிகரிப்பில் பெண் ஆசிரியர்களின் பங்களிப்பை அதிகபடுத்தும் வகையில் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |