dc.description.abstract |
மீளவலியுறுத்தலானது மாணவர்களின் வினைத்திறனான கற்றல் செயற்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்தவகையில் கனிஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் வினைத்திறனை அதிகரிக்கும் செயற்பாட்டில் மீளவலியுறுத்தல் செல்வாக்கு செலுத்தும் விதத்தினை கண்டறியுமுகமாக "கனிஷ்ட இடைநிலை மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் மீளவலியுறுத்தலின் செல்வாக்கு" என்னும் இவ் அளவைநிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தின் வலிகாம கல்வி வலயத்தின் சண்டிலிப்பாய் கல்விக் கோட்டத்தில் உள்ள கனிஷ்ட இடைநிலைப்பிரிவினைக் கொண்ட 19 பாடசாலைகளில் 25 சதவீதமான 5 பாடசாலைகள் ஒதுக்கீட்டுமாதிரி அடிப்படையிலும் இவ் பாடசாலைகளிலுள்ள 5 அதிபர்களும் கனிஷ்ட இடைநிலையில் கற்பிக்கும் 146 ஆசிரியர்களினை 5:1 என்னும் விகிதத்தில் படையாக்கப்பட்டு பின் இலகுஎழுமாற்று மாதிரியில் 30 ஆசிரியர்களும், 915 மாணவர்களில் 10:1 என்னும் விகிதத்தில் படையாக்கப்பட்டு பின் இலகுஎழுமாற்று மாதிரியில் 91 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் ஆய்வுக்கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், அவதானிப்பு, ஆவணங்கள் மூலமாக அளவு மற்றம் பண்பு ரீதியான தரவுகள் சேகரிகப்பட்டு எண் சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சேகரிகப்பட்ட தரவுகள் யாவும் மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் மீளவலியுறுத்தலின் செல்வாக்கு, வினைத்திறனான கற்றலில் ஆசிரியர் வகிபங்கு, மீளவலியுறுத்தல் செயன்முறையை உரிய வகையில் பிரயோகிப்பதில் உள்ள சவால்கள், அவற்றிற்கான ஆலோசனைகள் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் அளவு, பண்பு ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பாடசாலையில் கனிஸ்ட இடைநிலை பிரிவு மாணவர்களின் வினைத்திறனான கற்றல் விருத்தியில் மீளவலியுறுத்தலின் செல்வாக்கு குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணங்களாக மாணவர்கள் சார்பான, ஆசிரியர் சார்பான, வளங்கள் சார்பான, குடும்பச்சூழல் சார்பான காரணிகள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. எனவே மீளவலியுறுத்தல் மூலம் கனிஷ்ட இடைநிலைபிரிவு மாணவரிடையே வினைத்திறனான கற்றலை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு பாராட்டு, தனியாள் வேறுபாடுகளை இனங்காணல், வருடாந்த போட்டி நிகழ்வுகள் நடாத்தல், மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள். பரிகாரக்கற்பித்தலை மேற்கொள்ளல், இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை பாடசாலை மட்டத்தில் ஒழுங்கமைப்பதோடு அவற்றிற்கு ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்கள்
செயற்படல் போன்ற விதப்புரைகள் முன்வைக்கப்பட்டன |
en_US |